கிரிங்கதெனிய பகுதியில் தௌஹீத் ஜமாத் அமைப்புக்களின் இயக்க நடவடிக்கைகளுக்கு தடை

எம்.எல்.எஸ்.முஹம்மத்

நாட்டில் தற்போது நிலவிவரும் அசாதாரண நிலைமைகள் மற்றும் ஊர் பாதுகாப்பு ஆகியவற்றை கருத்திற் கொண்டு மாவனல்லை கிரிங்கதெனிய பகுதியில் தௌஹீத் ஜமாத் அமைப்புக்களின் அனைத்து இயக்க நடவடிக்கைகளுக்கும் கிரிங்கதெனிய ஜும்ஆ மஸ்ஜித் நிர்வாகம் இன்று(26)தடை விதித்துள்ளது.

இது தொடர்பாக மஸ்ஜித் நிர்வாக சபை தலைவர் அஷ்ஷெய்ஹ்.எம்.ஹுஸைன் ஹாபிஸ்  ஜும்ஆ தொழுகையின் பின் கருத்துத் தெரிவிக்கையில் 

"கிரிங்கதெனிய பகுதியில் தௌஹீத் அமைப்புக்களின் எந்தவொரு நிகழ்ச்சியையும் நடத்துவதற்கு மஸ்ஜித் நிர்வாகம் தடை விதிக்க தீர்மானித்துள்ளது.அத்துடன் இது தொடர்பாக தௌஹீத் இயக்க சகோதரர்கள் உட்பட ஊர் மக்கள் அனைவரும் மஸ்ஜித் நிர்வாகத்திற்கு பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும்",எனவும்  அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

இலங்கை அரசாங்கம் இதுவரை எந்தவொரு தௌஹீத் அமைப்பையும் சட்ட ரீதியாக தடை செய்யவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். 

No comments