போதைப் பொருள் பாவனையை ஒழிக்க அல்மக்கியா மாணவர்கள் சத்தியப்பிரமாணம்


எம்.எல்.எஸ்.முஹம்மத்

இரத்தினபுரி


அதி மேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிரிஸேன அவர்களின் "போதைகள் அற்ற தேசம்" என்ற தேசிய போதை ஒழிப்பு செயற்திட்டத்தின் கீழ் பாடசாலை மாணவர்களுக்கான புத்தான்டு உறுதி மொழி வழங்கும் தேசிய நிகழ்வை முன்னிட்ட  பாடசாலை மட்ட நிகழ்வுகள் நாட்டிலுள்ள அனைத்துப் பாடசாலைகளிலும் இன்று(3) ஆரம்பித்து வைக்கப்பட்டன.

இதற்கு இணங்க இரத்தினபுரி அல்மக்கியா முஸ்லிம் மகா வித்தியாலய மாணவர்களின் போதை ஒழிப்பு  தொடர்பான சத்தியப்பிரமாணம் மற்றும் உறுதிமொழி வழங்கும் நிகழ்வுகள் பாடசாலையின் அதிபர் எம்.எஸ்.எம்.மில்ஹான் தலைமையில் பாடசாலை வளாகத்தில் இன்று(3) இடம்பெற்ன.

தரம் 1 முதல் 13 வரையான மாணவர்கள் மற்றும் பிரதி அதிபர் உட்பட ஆசிரியர்கள் அனைவரும் கலந்து கொண்ட இந்நிகழ்வில் அதிபர் மில்ஹான் உரையாற்றுகையில்

இன்று மாணவ சமூகம் பல்வேறு பயங்கரமான சவால்களை எதிர்கொண்டு வருகின்றார்கள்.அரசாங்கம் முற்றிலும் இலவசமான கல்வியை வழங்கி மாணவ சமூகத்தை அறிவும்,ஆரோக்கியமும் மிக்கவர்களாக உருவாக்க விரும்புகிறது.


ஆனால் மூத்தவர்களின் தவறான வழிகாட்டல்களினாலும், போதிய அறிவின்மையினாலும் எமது மாணவ சமூகம் பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் சென்று அறிவும் ஆளுமையும் மிக்கவர்களாக வரவேண்டியவர்கள் போதைப் பொருள் பாவனைக்கு அடிமையாகி நிரந்த நோயாளர்களாகவும்,சமூக விரோதிகளாகவும் மற்றும் குற்றவாளிகளாகவும் வெளிவந்தது கொண்டிருக்கின்றனர்.

இது நாட்டின் ஆரோக்கியமான எதிர்கலாத்திற்குரிய சிறந்த அறிகுறிகள் அல்ல.இன்று மாணவர்களாகிய நீங்கள் உங்கள் அதிபர் மற்றும் உங்கள் ஆசிரியர்களின் முன்னிலையில் செய்து கொண்ட சத்தியப்பிரமாணமும் உறுதி மொழி வழங்கள்களும் உங்களால் உச்சரிக்கப்பட்ட வெறும் வார்த்தைகள் அல்ல.நீங்கள் உங்களுடைய அடிமனதினூக விளங்கிக் கூறிய, ஏற்றுக் கொண்ட உண்மையான வார்த்தைகள் சிலவாகும்.
நீங்கள் எந்த வகையிலும் போதைப் பொருள் பாவனையுடன் தொடர்புட மாட்டோம் என்று இன்று எங்களிடம் உறுதிமொழி அளித்துள்ளீர்கள்.இந்தச் செய்தியை நீங்கள் உங்கள் பெற்றோர்களிடமும்,குடும்பத்தினரிடமும்,உங்கள் சமூகத்தினரிடமும் எடுத்துச் செல்லுங்கள்.அவர்களும் நிச்சயமாக உங்களுக்கு உதவுவார்கள் என்று நான் நம்புகிறேன்", என அவர் தெரிவித்தார்.

இதன்போது போதைப் பொருள் பாவனையின் தீய விளைவுகள் தொடர்பாக மாணவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் இடம்பெற்றதுடன் ஆசிரியர்களின் முக்கிய  அறிவுரைகளும் இடம்பெற்றன.

No comments