சிறந்த முன்மாதிரி விளையாட்டு வீரனுக்கு ஏறாவூர் நகரசபையில் வேலைவாய்ப்பு.

சிறந்த முன்மாதிரி  ஏறாவூரைச் சேர்ந்த   Anaa Mersal Anas என்ற  விளையாட்டு  வீரனுக்கு ஏறாவூர் நகரசபையில் வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.


Premier League Division-1 2018 சுற்றுப்போட்டிகளில் பாணந்துறை நியூஸ்டார் கழகம் சார்பாக ஏறாவூர் பிரதேசத்தை சேர்ந்த இளந்தாரகை அணியின் முன்கள வீரர் Anaa Mersal Anas சுற்றுப்போட்டிகளில் விளையாடி 15 கோல்களை செலுத்தி சாதனை படைத்துள்ளார்.

நடைபெற்ற  Division-1 போட்டிகளில் அதிக கோல்களை அடித்து சிறந்த வீரருக்கான தங்கபாதணி (Golden boot) சாதனையினையும் இவர் பெற்றுக்கொண்டார்.


இவ்வாறு தொடராக ஏறாவூர் மண்ணுக்கு  பெருமைத்தேடிக் கொடுத்த  இவ்வீரனை யாரும் கண்டு கொள்ளாத நிலையில்  கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் ZA.நஸீர் அஹமட் அவர்களினால் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேற்படி கௌரவிப்பு நிகழ்வு (11.04.2019 வியாழன்) முன்னாள் முதலமைச்சரின் காரியாலயத்தில் இடம்பெற்றது.


இவ்வாறான இளைஞர்களின் வாழ்வாதாரத்தில் முன்னேற்றத்தை ஏற்படுத்தி இவர்களின் திறமையை தக்கவைத்துக்கொள்ள அதிகார காலத்தில் முன்னாள் முதலமைச்சர் பெரிதும் பங்காற்றி யுள்ளார் என்பதும் குறிப்பிடத்த்க்க து.

குறிப்பாக இவ்வீரரின் திறமையைக் கருத்தில் கொண்டு ஏறாவூர் நகரசபையில் தற்காலிய உழியனாக கடமையில் அமத்தியமை வரவேற்கத்தக்கது.

ஏறாவூர் மண்ணில் சிறப்பாக விளையாடி வரும் சகல வீரர்களையும் முன்னாள் முதலமைச்சர் ZA.நஸீர் அஹமட் பாராட்டியதுடன் இவ்வாறான செயல்பாட்டினை மேற் கொண்ட  முன்னாள் முதலமைச்சரை கழக வீரர்கள் பாராட்டினர்.

No comments