அகில இலங்கை ரீதியில் இடம்பெற்ற ஆங்கில மொழிப் போட்டியில் இரத்தினபுரி அல்மக்கியா மாணவன் சாதனைஎம்.எல்.எஸ்.முஹம்மத்
இரத்தினபுரி

கல்வி அமைச்சின் ஆங்கில மொழிப் பிரிவும், தர்மவாஹினி மன்றமும் இணைந்து  அகில இலங்கை ரீதியில் நடத்திய 2019ஆம் ஆண்டிற்கான ஆங்கில   "ஸ்பெல்மாஸ்டர்" மாணவ தெரிவுப் போட்டியில் இரத்தினபுரி அல்மக்கியா முஸ்லிம் மகா வித்தியாலய மாணவன் ஏ.ஆர்.உபைத்துர் றஹ்மான் வெற்றிபெற்று சாதனை படைத்துள்ளார்.

மேற்படி போட்டியின் மூலம் ஆங்கில மொழியில் மிகத் திறமை காட்டிய 500 மாணவர்கள் அகில இலங்கை ரீதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
 
தரம் 10இல் படிக்கும் மாணவன் உபைத்துர் றஹ்மான் இரத்தினபுரியைச் சேர்ந்த அஷ்ஷேய்ஹ்.அப்துர் றாஸிக் தம்பதிகளின் மூத்த புதல்வன் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

No comments