ஆளுநர் ஹிஸ்புல்லாஹ்வின் சித்திரைப்புத்தாண்டு வாழ்த்துச்செய்தி

ஊடகப்பிரிவு

மனக்கசப்புகள் நீங்கி இனங்களுக்கு மத்தியில் ஒற்றுமை ஏற்பட தமிழ்,சிங்கள புதுவருடத்தில் இறைவனைப்பிராத்திப்போமாக..!

சித்திரைப்புத்தாண்டு வாழ்த்துச்செய்தியில் ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் தெரிவித்துள்ளார்


நாட்டில் சமூகங்களிடையே அமைதி,நிம்மதி பெருகி அதன் மூலம் நிரந்தரமான ஒற்றுமை,மகிழ்ச்சி உருவாக இறைவனை பிராத்திப்போமாக என மலர்ந்துள்ள தமிழ்,சிங்கள புத்தாண்டையொட்டி கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் விடுத்துள்ள வாழ்த்துச்செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் இனங்களுக்கு மத்தியில் சகோதரத்துவத்தை உண்டாக்குவது பண்டிகைகளும் சமயம் சார்ந்த விழுமியங்களுமாகும் எனவே சமூகங்களிடையே புரிந்துணர்வையும் மகிழ்சியையும் ஏற்படுத்தும் இப்புத்தாண்டில் நாட்டில் அனைத்து இன மக்களும் மகிழ்வுடன் வாழ இறைவனை வேண்டுவதாக ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக வடக்கு,கிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழ்,சிங்கள மக்கள் பல்வேறு தேவைகளுடன் வாழ்ந்து வருகின்றனர் எனவே இப்புத்தாண்டில் அவ்வாறான குறைபாடுகள் நீங்கி புதுயுகம் உருவாகி அனைவரும் அமைதி,சமாதானம்,ஒற்றுமையுடன் வாழும் காலம் உருவாகுவதற்கான வழியை ஏற்படுத்த அனைவரும் முயற்சிக்கவேண்டும் எனவும் ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தனது புத்தாண்டு வாழ்த்துச்செய்தியில் தெரிவித்தார்.

No comments