கிழக்குமாகண சுகாதார முதன்மை அதிகாரிகள் ஆளுநர் ஹிஸ்புல்லாஹ்வினால் கௌரவிக்கப்பட்டனர்.

ஊடகப்பிரிவு
கிழக்கு மாகண சுகாதாரத் திணைக்களத்தின் ஏற்பாட்டில் முதன்மை சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆளுநர் ஹிஸ்புல்லாஹ்வினால் கௌரவிக்கப்பட்டனர்.
உலக வங்கியின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் மாகாண சபை உள்நாட்டு அமைச்சினூடாக மாகாணத்தில் நான்கு பிரிவுகளில் சிறப்பாக தமது செயற்திட்ட பணிகளை மேற்கொண்ட வைத்தியசாலைகள் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளை கௌரவிக்கும் வைபவம் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் ஏ.எச்.எம்அன்ஸார் தலைமையில் திருமலை இந்து கலாசார மண்டபத்தில் நேற்று இடம்பெற்றது.
இவ் வைபவத்தில் கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் பிரதம அதிதியாக பங்கேற்று முதன்மை வைத்தியசாலைக்கும்,  சாதனையாளர்களுக்கும் விருது வழங்கி கௌரவித்தார்.
இந் நிகழ்வில் உலக வங்கியின் சுகாதாரப்பிரிவின் நிகழ்ச்சித்திட்ட ஆலோசகர் தீபிகா ஆதிகல மற்றும் சுகாதார அமைச்சின் தொற்றா நோய்களுக்கான மேலதிக பணிப்பாளர் நாயகம் சம்பிகா வீரசிங்கம் உள்ளிட்ட முக்கிய உயர் அதிகாரிகள் பலரும் பங்கேற்றனர்.
இதன்போது கிழக்கு மாகாணத்தை சேர்ந்த முதன்மை அதிகாரிகளும் கடந்த காலங்களில் மாகாணத்தில் கடைமையாற்றி ஓய்வு பெற்ற வைத்தியர்களும் ஆளுநர் ஹிஸ்புல்லாஹ்வினால் கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

No comments