மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை அறிந்து கொள்ள ஆளுனர் ஹிஸ்புல்லாஹ் ஒலுவில் பிரதேசத்திற்கு விஜயம்

ஒலுவில் பிரதேச மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை அறிந்து கொள்ள கிழக்கு மாகாண ஆளுனர் கலாநிதி M.L.A.M ஹிஸ்புல்லாஹ் மற்றும் முன்னாள் அமைச்சர் M.S உதுமாலெப்பை ஆகியோர் ஒலுவில் பிரதேசத்திற்கு விஜயம் ஒன்றினை மேற்கொண்டிருந்தனர்.

கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் M.S உதுமாலெப்பை அவர்களின் அழைப்பை பேரினில் நேற்று (18) அம்பாறை மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்ட கிழக்கு மாகண ஆளுனர் ஒலுவில் பிரதேச மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை கேட்டறிந்து அவர்களுக்கு இயலுமான தீர்வை பெற்றுக்கொடுக்கும் நோக்கில் ஒலுவில் “வெளிச்ச வீடு” அருகில்  மீனவர்களை சந்தித்து கலந்துறையாடினர்.

மேற்படி சந்திப்பின் போது  மீனவர்கள் தங்களது பிரச்சினைகளை மகஜர் மூலமாக கிழக்கு மாகாண ஆளுனரிடம் கையளித்தனர்.. அதன் பின் கடலரிப்புக்குற்பட்ட பிரதேசத்தையும் கிழக்கு மாகாண ஆளுனர் பார்வையிட்டார்.

இந்நிகழ்வில் ஒலுவில் பிரதேச பள்ளித்தலைவர்,கிராம நிருவாக உத்தியோகத்தர்கள்,மீனவ சங்கத்தலைவர்,அரச உயர்யதிகாரிகள் ,சமூக அமைப்புக்களின் தலைவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

No comments