உலக தலைவர்கள் சந்திப்புகளையும் உதவிகளையும் இலங்கைக்கு வழங்க ஜனாதிபதியை தொடர்பு கொள்கின்றனர்


ஐ.நா.வின் செயலாளர் நாயகம் அன்டோனியோ குடரெஸ் (Antonio Guterres) உட்பட  உலகத் தலைவர்கள் பலர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் நேற்று (24) தொலைபேசியில் தொடர்பு கொண்டுள்ளனர். 

அவர்கள் தங்களின் இரங்கலை  தெரிவிப்பதற்கும், ஈஸ்டர் ஞாயிறு அன்று அப்பாவி பொதுமக்கள் மீதான மிருகத்தனமான தாக்குதலை கண்டித்தும், தங்களது கண்டனத்தை தெரிவித்தும், தேவையான உதவிகளையும் வழங்கும் முகமாகவே மேற்படி அழைப்பினை மேற்கொண்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

No comments