தீவிரவாத தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் தொடர்பாக தேசிய ஒருமைப்பாட்டுக்கான முற்போக்கு பேரவையின் கண்டன அறிக்கை.

         PROGRESSIVE COUNCIL FOR NATIONAL INTEGRATION
                            தேசிய ஒருமைப்பாட்டுக்கான முற்போக்கு பேரவை
                                        ජාතික සහජීවන ප්‍රගතිශීලි සම්මේලනය


 
Press Release             2019.04.25

அண்மையில் நமதுநாட்டின் கிரிஸ்தவதேவாலயங்கள் மற்றும் நட்சத்திரவிடுதிகள் மீது நடாத்தப்பட்ட தீவிரவா ததற்கொலைக்குண்டுத் தாக்குதல்கள் தொடர்பாக தேசிய ஒருமைப்பாட்டுக்கான முற்போக்கு பேரவை வெளியிடும்   கண்டன  அறிக்கை.


அண்மையில் நமதுநாட்டின் கிரிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர விடுதிகள் மீது நடாத்தப்பட்ட தற்கொலைக்குண்டுத் தாக்குதல்கள் தேசியபாதுகாப்புக்கும் இன ஒற்றுமைக்கும் விடுக்கப்பட்டுள்ள பாரிய அச்சுருத்தளாகும். 

அரசாங்கமும் பாதுகாப்பு தரப்பும் உடனடியாக செயல்பட்டு இத்தீவிரவாத சக்கியை முறியடிக்க வேண்டும். இத்தருனத்தில் இலங்கையர்களான நாம் அனைவரும் சதிவலைகளுக்குள் அகப்படாமல் ஒற்றுமையுடன் தற்போதைய நிலைமைகளை எதிர்கொள்ள  முன்வர  வேண்டும். 

ஒரு இன மக்களை மாத்திரம் குறிவைத்து பாரிய மனித அழிவுகளை ஏற்படுத்தும் நோக்கிலும் வெளிநாட்டவர்களை குறிவைத்துமே தீவிரவாதஎண்ணம் கொண்ட குழுவொன்றினால் இத்தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது. இவ்வாறான நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் வகையிலான தாக்குதல்கள் வண்மையாக கண்டிக்கத்தக்கவையாகும். 

அத்தகைய மிலேட்சத்தனமான தாக்குதல்களால் இலங்கைவாழ் மக்கள் அனைவரும் அச்சத்தில் மூழ்கியுள்ளனர். மனிதாபிமானமற்ற காட்டுமிரான்டித்தரமான மனிதத் தற்கொலைத் தாக்குதள்களால் அனைத்து சமுதாயித்தினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். 
நன்கு திட்டமிடப்பட்டு கிரிஸ்த வமக்களின் புனிதநாளான 'உயிர்த்தஞாயிறு' தினத்தன்று கிரிஸ்த வதேவாலயங்களில் மக்கள் பிரார்த்தனைகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்த வேளையில் பெருமளவிலான அப்பாவி மக்களின் உயிர்கள் காவு கொள்ளப்பட்டுள்ளன. இறைவழிபாட்டுத்தளங்களிலும் நட்சத்திர விடுதிகள் மீதும் நடாத்தப்பட்ட தற்கொலைக்குண்டுத் தாக்குதல்கள் ஏற்றுக்கொள்ளமுடியாதவை. இத்தீவிரவாத சம்பவங்கள் மனித சமுதாயத்தக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கையாகும். இவை முளையிலேயே கிள்ளியெறியப்பட்டு கட்டுப்படுத்தப்படல்  வேண்டும்.

எனவே இவ்வாறான தாக்குதல்களையும் குறிப்பாக தீவிரவாதம், இனவாதம்,மதவாதம் மற்றும் பயங்கரவாதம் என்பவற்றைநாம் வண்மையாக எதிர்கின்றோம். அவற்றுக்கு எதிராகவே நாமும் செயல்படுகின்றோம். இந்நிகழ்வுகள் துரதிஸ்டமானவை. இவற்றை அரசாங்கம் கட்டுப்படுத்த அவசரமாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவற்றுக்கு எதிராக செயல்படுவதற்கும் மக்களை ஆபத்துக்களில் இருந்து பாதுகாப்பதற்கும் அரசாங்கத்துக்கு பாரியபொறுப்புள்ளது. அதில் இருந்துயாரும் விலகிவிட முடியாது. ஒருவரைஒருவர் குற்றம்சாட்டுவதால் பிரட்சினைகள் தீரப்போவதில்லை. எதிர்காலத்தினை உறுதியுடன் எதிர்கொள்வதே இன்று எமக்குள்ள பாரிய சவாளாகும். இவ்வேளையில் மக்கள் பிரதிநிதிகள்,அரசியல் கட்சிகள்,சமூகஅமைப்புகள் என அனைவரும் இன,மத,மொழி,கட்சிவேறுபாடுகளின்றிஒன்றினையவேண்டும். 

(2) தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ள இயக்கங்கள்,அமைப்புகள் உடனடியாக தடைசெய்யப்பட்டு உடனடியாக தேசிய பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படல் வேண்டும். இனங்களுக்கிடையிலான நள்ளுறவு பேணப்படல் வேண்டும். தாக்குதல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்குரிய நஸ்டஈடுகளை துரிதமாக அரசாங்கம் வழங்கவேண்டும். இத்தாக்குதல்களின் பின்னணிகண்டறியப்பட்டு தீவிரவாதத்துடன் தொடர்புடையயாராக இருப்பினும் கைதுசெய்யப்பட்டு கடுமையான தண்டணைகள்  வழங்கப்படல் வேண்டும். 

இத்தருனத்தில் தாக்குதல்களில் உயிரிழந்தவர்களின் ஆத்ம சாந்திவேண்டியும் காயமடைந்தவர்கள் விரைவில் பூரண குணமடையவும் பிரார்த்திப்பதோடு உறவுகளை இழந்துதவிக்கும் குடும்பங்களுக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களையும் கவலையினையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.

A.R. மபூஸ் அஹமட். LL.B
தலைவர்
தேசிய ஒருமைப்பாட்டுக்கான  முற்போக்கு  பேரவை

No. 34/7, VaishakiyaMawatha, Obesekarapura, Rajagiriya. Srilanka.
                                       pcni@gmail.com Mob: 0768563214, 0710863119

No comments