ஸ்ரீ லங்கா முஸ்லிம் குரல் பத்திரிக்கையின் சமூக செயற்பாட்டாளர்களுக்கான கெளரவிப்பு நிகழ்வு..

(எம்.பஹ்த் ஜுனைட்)

ஸ்ரீ லங்கா முஸ்லிம் குரல் பத்திரிக்கையின் ஏற்பாட்டினில் பாரிய நோயினால் பாதிக்கப்பட்டவர்கள், தேவையுடைய மாணவர்களுக்கு கொடுப்பனவு வழங்கள் மற்றும் கெளரவிப்பு நிகழ்வு பத்திரிக்கையின் பிரதம ஆசிரியர் ஜே.எல்.எம்.ஏ.சாஜஹான் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை (07)  காத்தான்குடி அல்மனார் அறிவியற் கல்லூரி மண்டபத்தில் இடம்பெற்றது.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் குரல் பத்திரிக்கையின் சமூக செயற்பாட்டாளர்களுக்கான  கெளரவிப்பு நிகழ்வு..

நிகழ்வில்  ஜனாதிபதி சட்டத்தரணி ஏ.டபள்யூ, ஏ.சத்தார், தேச கீர்த்தி ஏ.ஆர்.மபூஸ் அஹமட் ஆகியோர் பிரதம அதிதியாக கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

சமூக செயற்பாட்டாளர்களுக்கான இவ்  கெளரவிப்பு நிகழ்வில் ஜாதிக பலசேனாவின் தலைவர் மரியாதைக்குரிய வட்டரக்க விஜித தேரர் , நிந்தவூர் பிரதேச செயலாளர் அஷ்ஷேய்ஹ் டீ.எம்.எம்.அன்சார் (நழீமி), தொழிலதிபர் ஏ.ஜீ.அப்துர் ரஹ்மான், ஊடகவியலாளர் டீன்.பைரூஸ் ஆகியோர் விருது வழங்கி கெளரவிக்கப்பட்டனர்.

இச் சிறப்புமிக்க கெளரவிப்பு நிகழ்வில் பிரமுகர்கள், உலமாக்கள், ஊடகவியலாளர்கள், பொதுமக்கள் என அதிகமானோர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது..No comments