இலங்கை எழுத்தாளர் அமைப்பினால் அனைத்து ஊடகங்களுக்கு விடுக்கப்பட்ட ஊடக வெளியீடு


உயிர்த்த ஞாயிறன்று இடம் பெற்ற மிலேச்சன்தனமாக தாக்குதலைக் கண்டித்து இலங்கை எழுத்தாளர் அமைப்பினால் அனைத்து ஊடகங்களுக்கு விடுக்கப்பட்ட ஊடக வெளியீடு.
உணர்ச்சிகளால் அல்லப் புத்திசாலித்தனத்துடனும் தூர நோக்குடனும் சவால்களுக்கு முகங்கொடுப்போம். 

கடந்த உயிர்த்த ஞாயிறன்று கிறிஸ்தவத் தேவாலயங்கள் உட்படச் சில ஹோட்டல்கள் மீது மேற்கொண்ட மிலேச்சன்தனமான பயங்கரவாதத் தாக்குதலை வன்மையாகக் கண்டிக்கின்ற நாம் அதனால் பாதிக்கப்பட்ட அனைத்துத் தரப்பினர்களுக்கும் எமது ஆழ்ந்த கவலையைத் தெரிவிக்கின்றோம்.


அனைவரையும் அதிர்ச்சியடைய அச்செயல் இடம் பெற்ற வேளையிலிருந்து உணர்ச்சிபூர்வமான உள்ளங்களைக் கொண்ட இலங்கை மக்கள் இன-மத-பேதங்களைப் பார்க்காது கவலையடைந்ததை மாத்திரமல்ல, இதற்குப் பத்து வருடங்களுக்கு முன்பு நமது நாடு எதிர் நோக்கிய இத்தகைய பயங்கரமான அனுபவங்களை மீண்டும் மீட்டிக்கொண்டு மனதில் பல முறை மரணத்தின்; இருண்ட நிழல்களைக் கண்டதையும் நாம் அறிவோம்.
கசப்பான யதார்த்தம் என்னவென்றால் நம் நாட்டிலுள்ள அனைத்தின மக்களும் ஏற்கனவே உயிர் பாதுகாப்பு பற்றிய பெரும் அச்சத்துடன் வாழ்வதாகும். நாட்டு மக்களது வாழ்வினை மீண்டும் வழமைக்குத் திருப்புவதற்கு அரசு, காவல் துறையினர் போன்று சிவில் அமைப்புகளும் ஆகக்கூடிய மட்டத்தில் செயற்பட வேண்டும் என்பதே எமது கருத்து.
அதற்கமைய, இலங்கையில்-சிங்கள-தமிழ் மற்றும் முஸ்லிம் எழுத்தாளர்கள் எந்த விதத்திலான கூற்றுகள் அல்லது செயற்பாடுகளைத் தவிர்த்துக் கொள்ளுமாறு நாம் வேண்டிக் கொள்கின்றோம்.
புலி பிரிவினை செயற்பாடுகளின்போது உணர்ச்சி வசப்பட்டவர்கள் சிலர் கூறியதும் செய்ததும் சாதாரணத் தமிழ் மக்களை அவர்களுக்குத் தேவையானவாறு பயன்படுத்த உறுதுணையாக இருந்ததை எமது கடந்த கால அனுபவங்கள் கற்பிக்கும் படிப்பினை என்பதையும், இங்கே நினைவுபடுத்த விரும்புகின்றோம். 
ஆகவே இத் தீர்க்கமான வேளையில் சமாதானம், சகவாழ்வு, மற்றும் ஒருமைப்பாட்டுடன் இலங்கைக்காக முன்னணியில் நிற்கும் எழுத்தாளர்கள் என்ற வகையில் நாம் இலங்கையர்கள் சகலரையும் இதயப்பூர்வமாகக் கேட்டுக் கொள்வது, சமயோசித்த சிந்தனையுடனும் ஐக்கியத்துடனும் இத்தேசியப் பிரச்சினையை வெற்றிகொள்வதற்கு கைகோர்த்து இணைந்திருப்போம் என்பதாகும்.
நன்றி.
டெனிசன் பெரேரா -தலைவர்
கமல் பெரேரா - செயலாளர் 
தொ.பே.077-3655151 071-7155951 
119யு பொல்ஹேன, களணி.

No comments