ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதற்கும் அஞ்சாத தலைவர் ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் தெரிவிப்பு

ஊடகப்பிரிவு) 

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதற்கும் அஞ்சாத தலைவர் என்பதை அவரது அதிரடி செயற்பாட்டில் கண்டு கொள்ள முடியும் என ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வழிகாட்டுதலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் மேற்கொள்ளப்படவுள்ள பல்வேறு அபிவிருத்தித்திட்டங்கள் தொடர்பாக ஆராயும் கூட்டம் கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தலைமையில் மட்டக்களப்பு ஆளுநர் விடுதியில் இடம் பெற்றது.

இதில் ஜனாதிபதியின் முன்னாள் செயலாளரும் ஸ்மாட் ஸ்ரீ லங்கா நிறுவனத்தின் பணிப்பாளருமான எரிக் வீரவர்தன பங்கேற்றார்.

இதன் போது மட்டக்களப்பு மாவட்டத்தில் ஜனாதிபதி தலைமையில் மேற்கொள்ளப்படவுள்ள பல்வகையிலான அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் தொடர்பாக ஆராயப்பட்டது.

இக்கூட்டத்தில் சிறீலங்கா சுதந்திர கட்சியினை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் மக்கள் பிரதிநிதிகள், அமைப்பாளர்கள் என முக்கியஸ்தர்கள் பலரும் பங்கேற்றனர்.

No comments