காத்தான்குடியில் வர்த்தக நிலையங்களை மூடி துக்கம் அனுஷ்டிப்பு..


(எம்.பஹ்த் ஜுனைட்)

நேற்றைய தினம் நாட்டில் சில பகுதிகளில் இடம்பெற்ற தற்கொலை குண்டு தாக்குதலில் இருநூற்றுக்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டதுடன் ஐநூறுக்கும் அதிகமான சகோதரர்கள் காயம் அடைந்த சம்பவம் இன,மத,மொழிகளுக்கு அப்பால்  இலங்கையில் உள்ள அனைத்து மக்களுக்கும் துக்கமான நாளாகவே இருந்தது. 

அதனை தொடர்ந்து இன்றைய தினம் மட்டக்களப்பு, காத்தான்குடி உட்பட பல பிரதேசங்களில் மக்கள் வர்த்தக நிலையங்களை மூடி வெள்ளைக் கொடி பறக்கவிட்டு துக்கத்தை அனுஷ்டித்தி வருவதுடன் காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் காத்தான்குடி தள வைத்தியசாலை அதியச்சகர் வைத்தியர் யூ.எல்.எம்.ஜாபிர் தலைமையில் காயம் அடைந்த சகோதரர்களுக்காக இரத்ததான முகம் ஒன்றும் காத்தான்குடி தள வைத்தியசாலையில் நடைபெற்று வருகிறது இதில் அதிகமான சகோதர ,சகோதரிகள் பங்கெடுத்து தங்களது இரத்தங்களை தானம் செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments