நாட்டுத்தலைவர்களுக்கு மைத்திரி ஒரு முன்மாதிரி ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் தெரிவிப்பு.

(ஊடகப்பிரிவு)

நாட்டுத்தலைவர்களுக்கு மைத்திரி ஒரு முன்மாதிரி யுத்தத்தை விட போதையை ஒழிக்க  ஜனாதிபதி எடுத்த சவால் சர்வதேச நாட்டுத்தலைவர்களுக்கும் எடுத்துக்காட்டாகும்- ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் தெரிவிப்பு.

"புத்தா வத்து மனுஸ்ஸானங்" சிறுவர்களைப் பாதுகாப்போம் ஜனாதிபதியின் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பாடசாலைகளுக்கு போதை ஒழிப்பு வேலைத்திட்டத்திற்காக அன்பளிப்புக்கள் இன்று வழங்கிவைக்கப்பட்டது. 

மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக மண்டபத்தில் ஜனாதிபதி செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி எ.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் பிரதம அதிதியாக பங்கேற்று தெரிவு செய்யப்பட்ட பாடசலைகளுக்கான அன்பளிப்புத்தொகையினை வழங்கி வைத்தார்.

 இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் மக்கள் பிரதிநிதிகள்,கல்வி அதிகாரிகள்,முக்கியஸ்தர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.

No comments