ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள்.. உலக நாட்டு தலைவர்கள் கடும் கண்டனம்ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 207 ஆக அதிகரித்துள்ளதுடன் 450 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் தெரிவித்துள்ளனர்.

இலங்கையிலுள்ள 3 தேவாலயங்கள், 3 பெரிய ஹோட்டல்கள், 2 வேறு இடங்கள் என 8 இடங்களில் குண்டு வெடிப்பு சம்பவங்கள் இடம் பெற்றுள்ளன.

பொலிஸ் பேச்சாளர் ருவன் குணசேகர கூறுகையில் 66 உடல்கள் தேசிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருந்த நிலையில் 260 பேர் காயமடைந்தனர். 104 பேர் சடலங்கள், நீர்கொழும்பு வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளனர். 100 பேர் காயமடைந்தனர்.

தேசிய மருத்துவமனையில் இறந்தவர்களுள் போலந்து டென்மார்க் சீனா ஜப்பான் பாக்கிஸ்தான் அமெரிக்கா இந்தியா மொராக்கோ மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த 27 வெளிநாட்டவர்களின்  சடலங்கள் உள்ளதாக தேசிய வைத்தியசாலையின் டாக்டர் அனில் ஜசிங்க தெரிவித்தார்.

மட்டக்களப்பில்  28 பேர் மரணம் அடைந்துள்ளதுடன் 51 பேர் சிகிச்சை பெறுகின்றனர்  நீர்கொழும்பு ஆஸ்பத்திரியில் 55 பேரும் 14 பேர் காயமடைந்த சிறுவர்களும் லேடி ரிக்வேவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

No comments