ஆரம்பப் பிரிவு மாணவர்களுக்கு பரிசில்கள் வழங்கி வைப்புஎம்.எல்.எஸ்.முஹம்மத்
இரத்தினபுரி

கடந்த முதலாம் தவணைப் பரீட்சையில் மிகத் திறமையான முறையில் சித்தியடைந்த இரத்தினபுரி அல்மக்கியா முஸ்லிம் மகா வித்தியாலய ஆரம்பப் பிரிவு மாணவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வு கடந்த வியாழக்கிழமை(11) இடம்பெற்றது.

அல்மக்கியா பாடசாலையின் ஆரம்பப் பிரிவுத் தலைவர் ஆசிரியை றிஸானா பேகம் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பாடசாலையின் அதிபர் எம்.எஸ்.எம்.மில்ஹான் பிரதம அதிதியாக கலந்கொண்டார்.

தரம் 1 முதல் 5 வரையுள்ள மாணவர்கள் மற்றும் ஆரம்பப் பிரிவு ஆசிரியர்கள் அனைவரும் கலந்து கொண்ட இப்பரிசளிப்பு நிகழ்வை ஆசிரியை எப்.ஸுபைதா  ஏற்பாடு செய்திருந்தார்.


No comments