நீராடச் சென்ற இளைஞர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

திருகோணமலை-சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட  கலப்பு பகுதியில் நீராடச் சென்ற இளைஞர் ஒருவர் நேற்று மாலை(11)  உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


இவ்வாறு உயிரிழந்தவர் சூரநகர், வெருகல்முகத்துவாரம் பகுதியைச் சேர்ந்த ராஜா சதீஷ் (25 வயது)  எனவும் சேருநுவர பொலிஸார் தெரிவித்தனர்.


சூரநகர் கலப்பு பகுதிக்கு தமது நண்பர்கள் ஏழு  பேருடன் நீராடச் சென்றபோது நீரில் மூழ்கிய நிலையில் அவர் உயிரிழந்துள்ளதாகவும் அவருடைய சடலம் பிரேத பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் சேருநுவர பொலிஸ் பொறுப்பதிகாரி ஆனந்த தெரிவித்தார்.


குறித்த பிரேத 

பரிசோதனையடுத்து சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாகவும், விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் சேருநுவர பொலிஸார் தெரிவித்தனர்.

No comments