கிண்ணியா மேல் திடல் பிரதான வீதி புனரமைக்க ஒரு கோடி ரூபா நிதி ஒதுக்கீடு

கிண்ணியா பிரதேச சபை எல்லைக்குட்பட்ட காக்காமுனை  கிராம சேவகர் பிரிவிலுள்ள மேல்திடல்  பிரதான வீதியை புனரமைப்பதற்காக  ஒரு கோடி ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது

பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் அவர்களின்  நிதி ஒதுக்கீட்டியில் மேல் திடல் பிரதான வீதி காப்பேட் வீதியாக புனரமைப்பதற்காக நிதி ஒதுக்கீடு  செய்யப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினரின் பிரத்தியோக செயலாளர் கே.எம்.நிஹார் தெரிவித்தார்

வீதியை பார்வையிடுவதற்காக பொறியலாளருடன்  பாராளுமன்ற உறுப்பினரின் செயலாளரும் வருகைதந்திருந்த வேளை மக்களிடம் தெரியப்படுத்தினார்

இவ்வீதி புனரமைக்கப்படாது மிக நீண்ட காலமாக சேதமடைந்து குண்டும் குழியுமாகவும், மழை காலங்களில் நீர் தேங்கிக் காணப்படுவதாகவும் தெரியப்படுத்தப்பட்டதாகவும் தெரிவித்தார்

இவ்வீதியூடாக தினமும் பிரயாணம் செய்கின்ற பாடசாலை மாணவர்கள் , வியாபாரிகள், வயோதிபர்கள், பெண்கள் ஆகியோர் சிரமப்படுவதாக தெரியப்படுத்தியதை அடுத்து புனரமைப்பதற்கு  நடவடிக்கை எடுக்கப்பட்டதாக பாராளுமன்ற உறுப்பினரின் பிரத்தியோக செயலாளர் கே.எம்.நிஹார் தெரிவித்தார்

No comments