80 இலட்சம் செலவில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு அபிவிருத்தித்திட்டங்கள் மக்கள் பாவனைக்காக வழங்கிவைப்பு.

ஊடகப்பிரிவு)

80 இலட்சம் செலவில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு அபிவிருத்தித்திட்டங்கள் மக்கள் பாவனைக்காக வழங்கிவைப்பு. 

பிரதம அதிதியாக ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் பங்கேற்பு.

"வெல்லும் நாட்டிற்கு உருவாகும் வழி" கிராமிய வீதிகள் நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு பாலமுனையில் பல்வேறு அபிவிருத்தித்திட்டங்கள் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டு மக்களின் பயண்பாட்டுக்காக திறந்துவைக்கப்பட்டது.

இதற்கமைவாக நாவலடி வீதி,டொக்டர் அஹமட் பரீட் வீதி மற்றும் பாலமுனை குடும்ப நல காரியாலயத்திற்கான கூரை அமைத்தல் போன்ற வேலைத்திட்டங்கள் கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் பங்கேற்புடன் திறந்து மக்கள் பாவனைக்காக வழங்கிவைக்கப்பட்டது.

மண்முனைப்பற்று பிரதேச சபை உறுப்பினர் எம்.ஐ.எம்.அஜ்வத் தலைமையில் நேற்று இடம்பெற்ற வைபவத்தில் காத்தான்குடி நகரசபையின் தவிசாளர் எஸ்.எச்.எம்.அஸ்பர் மண்முனைப்பற்று பிரதேச சபை உறுப்பினர்களான எம்.ஐ.எம்.நசீம் ஏ.பி.எம்.றசீம் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பலரும் பங்கேற்றனர்.

அத்துடன் இத்திட்டத்தினூடாக வீதிகள் வீட்டுக்கான கூரைகள் மீன்பிடி உபகரணங்கள் என்பன உள்வாங்கப்பட்டு வழங்கிவைக்கப்பட்டுள்ளது.

No comments