நோயாளிகளுக்கு தனது விந்தணுவை செலுத்தி 49 பேருக்கு தந்தையான மருத்துவர்நோயாளிகளுக்கு தனது விந்தணுவை செலுத்தி 49 பேருக்கு தந்தையான மருத்துவர். 

ஹாலாந்தில் மருத்துவர் ஒருவர் தன்னிடம் சிகிச்சைக்கு வந்த நோயாளிகளின் அனுமதி இல்லாமல் தனது விந்தணுவை செலுத்தியதன் மூலம் 49 குழந்தைகள் பிறந்துள்ளது உறுதியாகியுள்ளது.

டிஎன்ஏ பரிசோதனையின் மூலம் ஹாலந்தின் ரோட்டர்டாம் நகருக்கு அருகில் உள்ள அவரது மருத்துவமனையில் ஜேன் கார்பெட் தனது நோயாளிகளை கர்ப்பமாக்கியுள்ளார் என்று தெரியவந்துள்ளது.

கடந்த வெள்ளியன்று நீதிபதி டிஎன்ஏ முடிவுகளை வெளியிட்டதும் இந்த செய்தி உறுதியானது. 2017இல் அவர் தனது 89ஆம் வயதில் மரணமடைந்தார்.
குழந்தைகளில் ஒருவர் தனது தந்தை கார்பெட் என்று தற்போது தெரியவந்தவுடன் இந்த விஷயம் ஒரு முடிவுக்கு வந்துள்ளதாக தெரிவித்தார்.

இந்த வழக்கு 2017ஆம் ஆண்டு சில குழந்தைகள் மற்றும் அவரது பெற்றோர்களின் மூலம் நீதிமன்றத்துக்கு கொண்டு வரப்பட்டது. அதில் ஒரு குழந்தைக்கு மருத்துவரின் உருவ ஒற்றுமை இருந்தது.b/ta

No comments