யு.எல்.எம்.என்.முபீனின் வேண்டுகோளின் பேரில் இராஜாங்க அமைச்சர் அலி ஸாஹிர் மௌலானா அவர்களூடாக காத்தான்குடி பிரதேச செயலகப்பிரிவில் கம்பரெலிய திட்டத்தின் மூலமான 25.7 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு(ஆதிப் அஹமட்)
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளரும்,காத்தான்குடி பிரதேச  அமைப்பாளருமான யு.எல்.எம்.என்.முபீன் அவர்களின் வேண்டுகோளின் பேரில் சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சரும்,ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான அலி ஸாஹிர் மௌலானா அவர்களினூடாக "கம்பரெலிய" துரித கிராமிய அபிவிருத்தி வேலைத்திட்டத்தில் காத்தான்குடி பிரதேசத்தில் பல்வேறு வீதிகளின் அபிவிருத்தி பணிகளுக்காக ரூபா 25.7 மில்லியன் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அந்தவகையில் காத்தான்குடி ஸாவியா சதுக்க உள்ளக வீதிகளுக்கு கொங்கிறீற்று இடுவதற்காக ரூபா 10 இலட்சமும்,காத்தான்குடி ஹிஜ்ரா வீதிக்கு கொங்கிறீற்று இடுவதற்காக ரூபா 10 இலட்சமும்,ஹிஜ்ரா வீதி முதலாம் குறுக்கு வீதிக்கு கொங்கிறீற்று இடுவதற்காக ரூபா 10 இலட்சமும்,நாகூர் ஏ பாவா வீதிக்கு கொங்கிறீற்று இடுவதற்காக ரூபா 10 இலட்சமும்,ஏ.பி.எச். வீதியின் உள்ளக வீதிகளுக்கு கொங்கிறீற்று இடுவதற்காக ரூபா 10 இலட்சமும்,ஹஸன் மௌலவி வீதிக்கு கொங்கிறீற்று இடுவதற்காக ரூபா 15 இலட்சமும்,அல் அமீன் வீதி அரபாத் ஆசிரியர் ஒளுங்கை மற்றும் கடற்கரை வீதி உள்ளக வீதிகள் கொங்கிறீற்று இடுவதற்காக ரூபா 15 இலட்சமும்,ஐ.எல்.எம்.முஸ்தபா பஹ்ஜி வீதிக்கு கொங்கிறீற்று இடுவதற்காக ரூபா 7 இலட்சமும்,பரிகாரியார் வீதிக்கு கொங்கிறீற்று இடுவதற்காக ரூபா 8 இலட்சமும்,டொக்டர் அப்துர்ரஹ்மான் வீதி திருத்தப்பணிக்கும் கார்பட் இடுவதற்கும் ரூபா 10 இலட்சமும்,ஆற்றங்கரை வீதியின் முபீன் உள்ளக வீதிக்கு கொங்கிறீற்று இடுவதற்காக ரூபா 5 இலட்சமும்,அஹமட் வீதிக்கு கொங்கிறீற்று இடுவதற்காக ரூபா 10 இலட்சமும்,மீன்பிடி இலாகா வீதி அனஸ் ஆசிரியர் வீதிக்கு கொங்கிறீற்று இடுவதற்காக ரூபா 7 இலட்சமும்,பரீட் நகர் அஸ்பர் மௌலவி வீதிக்கு கொங்கிறீற்று இடுவதற்காக ரூபா 5 இலட்சமும்,அன்வர் பாலர் பாடசாலை பின் வீதிக்கு தார் இடுவதற்காக ரூபா 10 இலட்சமும்,ஷகீனா வீதிக்கு கொங்கிறீற்று இடுவதற்காக ரூபா 12 இலட்சமும்,இஸ்மாயில் ஓடாவியார் வீதிக்கு பொருத்துக்கல் இடுவதற்காக ரூபா 7 இலட்சமும்,விடுதி வீதி நான்காம் குறுக்கு வீதிக்கு பொருத்துக்கல் இடுவதற்காக ரூபா 6 இலட்சமும்,கர்பலா உள்ளக வீதிகளுக்கு கொங்கிறீற்று இடுவதற்காக ரூபா 10 இலட்சமும்,மனேஜர் குறுக்கு வீதிக்கு பொருத்துக்கல் இடுவதற்காக ரூபா 4 இலட்சமும்,மையவாடி குறுக்கு வீதிக்கு  பொருத்துக்கல் இடுவதற்காக ரூபா 5 இலட்சமும்,முஹைதீன் ஜும்மா பள்ளிவாயல் உள்ளக வீதிக்கு கொங்கிறீற்று இடுவதற்காக ரூபா 8 இலட்சமும்,அமானுல்லாஹ் உள்ளக வீதிகளுக்கு கொங்கிறீற்று இடுவதற்காக ரூபா 10 இலட்சமும்,ஹாசனாத் வட்டார உள்ளக வீதிகளுக்கு கொங்கிறீற்று இடுவதற்கு ரூபா 8 இலட்சமும்,பதுரியா ரிஸ்வி நகர் குறுக்கு வீதிக்கு கொங்கிறீற்று இடுவதற்காக ரூபா 15 இலட்சமும்,நூறாணியா பாம் வீதிக்கு தார் இடுவதற்காக ரூபா 10 இலட்சமும் ஒதுக்கீடுகள் செய்யப்பட்டுள்ளன.
இது போல  பாலமுனை,காங்கேயானோடை,ஒல்லிக்குளம், சிகரம், கீச்சாம்பள்ளம், பூநொச்சிமுனை,மஞ்சந்தொடுவாய் போன்ற பகுதிகளுக்கும் அதிகமான  நிதி ஒதுக்கீடுகள் இத்திட்டத்தின் மூலமாக ஒதுக்கீடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும்  அது தொடர்பில் அடுத்த பதிவில் தகவல்கள் வெளியிடப்படுமெனவும்  யு.எல்.எம்.என்.முபீன் தெரிவித்தார்.

No comments