புதிய மாணவர் அனுமதிக்கான நேர்முகப்பரீட்சை –2019 இஸ்லாஹிய்யா அரபுக்கல்லூரி மாதம்பை

மாதம்பை இஸ்லாஹிய்யா அரபுக்கல்லூரிக்குக்கு புதிய மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான நேர்முகப்பரீட்சை எதிர்வரும் 20 (சனிக்கிழமை)மற்றும் 21(ஞாயிற்றுக்கிழமை) ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது. 
மேற்படி நேர்முகப் பரீட்சை கல்லூரி வளாகத்தில் காலை 8 மணி முதல் ஆரம்பமாகும்.


இஸ்லாஹிய்யா அரபுக் கல்லூரிக்கு கல்விப் பொதுத் தராதர உயர்தர கலைப் பிரிவுடன் அரபு மற்றும் இஸ்லாமிய கற்கைகளில் லைசன்ஷியேட் மற்றும் கல்விப் பொதுத் தராதர உயர்தர வர்த்தக பிரிவுடன் அரபு மற்றும் இஸ்லாமிய கற்கைகளில் டிப்ளோமா கற்கைகளுக்காக மாணவர்கள் உள்வாங்கிக் கொள்ளப்படவுள்ளனர். 


6 வருடங்களைக் கொண்ட கல்விப் பொதுத் தராதர உயர்தர கலைப் பிரிவுடன் அரபு மற்றும் இஸ்லாமிய கற்கைகளில் லைசன்ஷியேட் கற்கைக்கு கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் சித்தியடைந்து உயர்தரப் பரீட்சைக்கு தோற்றுவதற்கான குறைந்தபட்ச தகைமைகளை பெற்றவர்கள் தகுதிபெறுகின்றனர். 


அதேபோன்று, 3 வருட கற்கை காலத்தைக் கொண்ட கல்விப் பொதுத் தராதர உயர்தர வர்த்தக பிரிவுடன் அரபு மற்றும் இஸ்லாமிய கற்கைகளில் டிப்ளோமா பயிற்சிக்கு கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சையில் கணிதம் அல்லது தமிழ் உட்பட 3 பாடங்களில் C தரச்சித்தியுடன் குறைந்தது 6 பாடங்களில் சித்தியடைந்தவர்கள் தகுதிபெறுகின்றனர். 


2001-01-01ஆம்திகதிக்குப் பின்னர் பிறந்த மாணவர்கள் கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைபெறுபேற்றின் மூலப் பிரதி, பிறப்புச் சான்றிதழின் மூலப்பிரதி, தேசிய அடையாள அட்டை மற்றும் ஏனைய சான்றிதழ்களுடன் நேர்முகப் பரீட்சைக்கு தோற்றலாம். 


இஸ்லாஹிய்யாவின் ஆறு வருட கற்கையை பூர்த்தி செய்யும் மாணவர்கள் இலங்கைப் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகாரம் பெற்ற சூடான் சர்வதேச இஸ்லாமிய பல்கலைக்கழகத்தின் கலைமானி பட்டத்தை பெறும் வாய்ப்பினைப் பெற்றுக் கொள்கின்றனர்.


டிப்ளோமா கற்கையை தொடரும் மாணவர்கள் அம் மூன்றுவருட காலத்தினுல் AAT கற்கையை பூர்த்தி செய்யும் வாய்ப்பினைப் பெற்றுக் கொள்கின்றனர்.
இஸ்லாஹிய்யா அரபுக் கல்லூரியின் நேர்முகப் பரீட்சை தொடர்பான மேலதிக விபரங்களை 0777345367,0772649152, 0773458366, ஆகிய தொலைபேசி இலக்கங்களை தொடர்பு கொள்வதன் ஊடாக பெற்றுக் கொள்ளலாம்.


No comments