தேர்தல் 2019: புர்கா அணிந்துகொண்டு கள்ள ஓட்டு - பாஜகவினர் தடுத்தது உண்மையா...?

முஸாஃபர்நகர் மக்களவைத் தொகுதியின் பாரதிய ஜனதா ஊழியர் ஒருவர் புர்கா அணிந்திருந்த பெண்கள் குழு ஒன்றிடம் இருந்து போலி ஆதார் அட்டைகளை கைப்பற்றியதாக சமூக ஊடக காணொளி பதிவு ஒன்று வைரலாகியுள்ளது.
ஏப்ரல் 11ம் தேதி வியாழக்கிழமை முதல் கட்ட மக்களவைத் தொகதி தேர்தல்கள் நடைபெற்ற பின்னர் இந்தியாவில் நடைபெறும் 17வது மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறுகின்றன. மே மாதம் இதன் முடிவுகள் அறிவிக்கப்படும்.
புர்கா அணிந்த சில பெண்கள் கள்ள ஓட்டுகளை போடுவதாக முஸாஃபர்நகர் பாஜக வேட்பாளர் சன்ஜீவ் பல்யான் தெரிவித்தார்.
அவர் குற்றம்சாட்டுவது ஆயிரக்கணக்கான முறை ஃபேஸ்புக்கிலும், ட்விட்டரிலும் பகிரப்பட்டு பார்க்கப்பட்டுள்ளது.

No comments