இராஜாங்க அமைச்சர் அலி ஸாஹிர் மௌலானாவின் சுமார் 20 கோடி செலவிலான வேலைத்திட்டங்கள் விரைவில்

(ஊடகப்பிரிவு)

இராஜாங்க அமைச்சர் அலி ஸாஹிர் மௌலானாவின் சுமார் 20 கோடி கம்பெரலிய  வேலைத்திட்டங்களுக்கு அனுமதி 

கம்பெரலிய -கிராமிய துரித அபிவிருத்தி வேலைத்திட்டத்திற்காக சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான அலி ஸாஹிர் மௌலானா அவர்களினால் மட்டக்களப்பு மாவட்டத்தில்  முதற்கட்டமாக சமர்ப்பிக்கப்பட்ட சுமார் 195மில்லியன் ரூபாய் (19கோடியே 57 இலட்சத்து 50 ஆயிரம் )செலவில் அபிவிருத்தி பணிகளை மேற்கொள்ள தேசிய கொள்கைகள் பொருளாதார விவகாரங்கள், மீள் குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வு , வடமாகாண அபிவிருத்தி மற்றும் இளைஞர் விவகார அமைச்சினால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதன் பிரகாரம் மட்டக்களப்பு மாவட்டத்தில் 187 வீதி அபிவிருத்தி பணிகள் முன்னெடுக்கப்பட உள்ளதுடன் , 50 மத ஸ்தலங்கள் புனரமைக்கப்பட்டு அபிவிருத்தி செய்யப்பட உள்ளது  , அத்துடன் 2 மத ஸ்தலங்களுக்கு சூரிய களத்தின் மூலம் மின்சார வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்காகவும் குறித்த நிதி ஒதுக்கீடு செய்யப்படடுள்ளது.

கம்பெரலிய துரித அபிவிருத்தி வேலைத்திட்டத்திற்காக ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் தலா முன்னூறு மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு முதற்கட்டமாக சுமார் 200மில்லியனும் இரண்டாம் கட்ட 100 மில்லியன் நிதியும் விரைவில் ஒதுக்கீடு செய்யப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments