மட்டக்களப்பு மாவட்ட முன்பள்ளி ஆசிரியர்களுக்கான தொழில்சார் தகமை NVQ சான்றிதழ் வழங்கும் நிகழ்வு கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் நஸீர் அகமட் தலைமையில் இடம் பெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட முன்பள்ளி ஆசிரியர்களுக்கான தொழில்சார் தகமை NVQ சான்றிதழ் வழங்கும் நிகழ்வுக்கான ஆரம்ப விழா நேற்று மட்டக்களப்பு தொழிற்பயிற்சி கல்வி நிலையத்தில் கிழக்குமாகாண முன்னாள் முதலமைச்சரும் வடக்கு கிழக்கு மாகாண அபிவிருத்தி செயலனியின் ஜனாதிபதியின் ஆலோசகரும் தேசிய பயிலுநர் மற்றும் கைத்தொழிற் பயிற்சி அதிகாரசபையின் தவிசாளர் ZA.நஸீர் அகமட் தலைமையில் நேற்று 17.03.2019 காலை இடம் பெற்றது.

இன் நிகழ்வில் கிழக்கு மாகாண முன்னாள் விவசாய அமைச்சரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் செயளாருமான துறைராஜ சிங்கம் ,கிழக்குமாகாண முன்னாள் வீதி அவிவிருத்தி மற்றும் நிர்பாசண அமைச்சரும் தற்போதைய கிழக்குமாகாண முன்பள்ளி பணியகத்தின் தலைவருமான உதுமாலெப்பை, முன்னாள் கிழக்குமாகாண சபை உறுப்பினர் பொறியலாளர் சிப்லி பாறூக், மட்டக்களப்பு மாவட்ட பாடசாலை அபிவிருத்தி பொறியலாளர் ஹக்கீம்,மட்டக்களப்பு மாவட்ட முன்பள்ளி கல்வி பணிப்பாளர் சசிகுமார்,

மட்டக்களப்பு மத்திய வலய முன்பள்ளி கல்வி உதவிப்பணிப்பாளர் கலீல் ,ஏறாவூர் நகரசபையின் கௌரவ உறுப்பினர்களான (சரூஜ்,ஜெமில்,றியாழ்) ,பதியுதீன் மஹ்மூத் பாடசாலையின் அதிபர் ஜலால்தீன்,

முச்சக்கர வண்டி சங்கத்தலைவர் வஹாப் 

ஆகியோருடன் ,நைட்டா நிறுவனத்தின் director நிரந்தடி சில்வா,director quality. Mr.பத்மா திவாகர மற்றும் நைட்டா நிறுவனத்தின் மட்டக்களப்பு மாவட்ட முகாமையாளர் சலீம் மௌலானா மற்றும் நைட்டா நிறுவனத்தின் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

மிக நீண்டகாலமாக தகுதிகாண் சான்றிதழ்கள் இல்லாமல் முனபள்ளியில் பணிபுரியும் இவ்ஆசிரியைகளுக்கான கொடுப்பணவு 3,000.00 ரூபாய் கடந்த மாகாண சபைக்காலத்தில் வழங்கிவைக்கப்பட்டதுடன் இன்றுவரை அது 4,000.00 ஆக ஆழுனரால் அதிகரிக்கப்பட்டு வழங்கப்பட்டு வருகின்றது. 

இப்படியான ஆசிரியர்களுக்கு NVQ 4 சாண்றிதழ்களை வழங்கும்நிமிர்த்தம் நேற்று இதற்கான தகுதிகாண் நேர்முகப்பரீட்சை இடம்பெற்றதுடன் இதற்கான தகுதியை அடையாத ஆசிரியைகளுக்கான gap filling எனப்படும் துரித கற்கைநெறிமூலமாக அவர்களையும் தகுதியானவர்களின் நிலைக்கு மாற்றுவதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்படவுள்ளது 

இதன்மூலம் எதிர்காலத்தில் முன்பள்ளி ஆசிரியர்களுக்கான அரச நியமனங்கள் வழங்கப்படும்பட்சத்தில் இச்சாண்றிதழ்கள் பெரிதும் உதவுவதுடன் ஏனைய அரச, தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பிற்கான தகுதிகாண் சாண்றிதளாகவும் இது அமையும். 

இவ்வாறான பல திட்டங்கள் தொழில்வாய்ப்பொன்றினை பெற்றுக்கொள்ளும் நிமிர்த்தம் நமது இளைஞர் யுவதிகளுக்காக முன்னெடுக்கப்படவுள்ளது.

No comments