விவசாய நவீன மயமாக்கல் மானியத்திட்டம் தொடர்பில் விளக்கமளிக்கும் நிகழ்வு

(ஆதிப் அஹமட் )   

ஆரம்ப கைத்தொழில் சமூக வலுவூட்டல் அமைச்சினால் விவசாய பண்ணைத்தொழில் மற்றும் ஆரம்ப கைத்தொழில் நவீன தொழில் முயற்சியாளர்களுக்காக மானியத்திட்டமொன்று செயற்படுத்தப்பட்டு வருகின்றது.இத்திட்டம் மட்டக்களப்பு மாவட்டத்தில் சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் செய்யித் அலி ஸாஹிர் மௌலானா அவர்களின் வழிகாட்டலில் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தினூடாக இத்திட்டம் மட்டக்களப்பு மாவட்டத்தினை சேர்ந்தவர்களுக்கு வழங்கப்பட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்த திட்டங்களில் ஆர்வம் செலுத்துகின்ற தொழில் முயற்சியாளர்களை தெளிவூட்டுகின்ற நிகழ்வொன்று நகர திட்டமிடல் நீர் வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சின் இணைப்புச் செயலாரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய கொள்கை பரப்புச் செயலாளருமான யு.எல்.எம்.என்.முபீன் அவர்களின் ஏற்பாட்டில் நேற்று(16) புதிய காத்தான்குடி அல்மனார் நிறுவன கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.


இந்நிகழ்வில் விஷேட வளவாளர்களாக கலந்துகொண்ட மிருக வைத்திய நிபுணர் மாஹிர் அவர்கள் நவீன முறையில் எவ்வாறு பயன்தரும் மிருகங்களை வளர்த்து அவற்றிலிருந்து பயனை பெற்றுக்கொள்வது என்பது தொடர்பிலும் நவீன முறையில் எவ்வாறு இடப்பற்றாக்குறையான இடங்களிலும் விவிசாய செய்கைகளை மேற்கொள்ள முடியும் என்பதையும் விரிவாக பயனாளிகளுக்கு விளக்கியதோடு மாவட்ட விளையாட்டு அபிவிருத்தி உத்தியோகதத்தர் ஆதம் அவர்கள் நவீன தொழிநுட்பங்களோடு கூடிய முறையில் கடற்தொழில்,நன்னீர் மீன் மற்றும் இறால் வளர்ப்பை எவ்வாறு மேற்கொள்ளலாம் என்பதையும் தெளிவூட்டினார்.


இந்நிகழ்வில் உரையாற்றிய யு.எல்.எம்.என்.முபீன் அவர்கள்,நமது பிரதேச தொழில் முயற்சியாளர்கள் சமூகத்தின் முக்கிய பங்குதாரர்கள் என்றும் அவ்வாறான தொழில் முயற்சியாளர்கள் எவ்வாறு தங்களின் தொழில் முயற்சிகளை நவீனமயப்படுத்தி இத்திட்டமூடாக பயன்பெற முடியும் என்பதை விளக்கியதோடு நவீன ரீதியான முயற்சிகள் மூலமே உலகின் சவால்களுக்கு முகங்கொடுக்க முடியும் எனவும் தெரிவித்தார்.அவ்வாறான நவீன முயற்சியாளர்களுக்கு இத்திட்டமூடாக மானிய உதவிகளை பெற சகல வழிகளிலும் தான் ஒத்துழைப்பு வழங்க தயாராக இருப்பதாகவும் அமைச்சு மட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய அனைத்து பனிகளையும்  இராஜாங்க அமைச்சர் செய்யித் அலி ஸாஹிர் மௌலானா அவர்களூடாக மேற்கொள்ள முடியும் எனவும் தெரிவித்தார்.இத்திட்டமூடாக நன்மையினை பெற எதிர்பார்ப்பவர்களுக்கான நேர்முகப்பரீட்சையொன்று அமைச்சின் உயர் மட்ட அதிகாரிகளினால் எதிர்வரும் 21ம் திகதி மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடாத்தப்படவுள்ளதாகவும் இதற்கு முகங்கொடுக்குமாறும் மேலும் தெரிவித்தார்

No comments