ஆளுநர் ஹிஸ்புல்லாஹ்வை பலஸ்தீன இலங்கை தூதுவர் ஸூஹைர் ஸைட் சந்தித்தார்.

(ஊடகப்பிரிவு) 

மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்ட பலஸ்தீன் நாட்டின் இலங்கைக்கான தூதுவர் கலாநிதி ஸூஹைர் எம்.எச்.ஸைட் ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் அழைப்பின் பேரில் இன்று மாலை காத்தான்குடிக்கு விஜயமொன்றை மேற்கொண்டார்.

காத்தான்குடி அலுவலகத்திற்கு வருகை தந்த தூதுவருக்கு ஆளுநர் ஹிஸ்புல்லாஹ்வினால் மகத்தான வரவேற்பு வழங்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து காத்தான்குடி பூர்வீக நூதனசாலைக்கு விஜயம் செய்து பார்வையிட்டதுடன் புதிய காத்தான்குடி அல்-அக்ஸா பெரிய பள்ளிவாயலுக்கும் விஜயம் செய்து பார்வையிட்டார்.

இதன்போது ஆளுநர் ஹிஸ்புல்லாஹ்வினால் தூதுவர் ஸூஹைருக்கு நினைவுச்சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

No comments