பலாஸ்தீன் நில தினத்தை முன்னிட்டு கிண்ணியாவில் சர்வமத தலைவர்கள் ஒன்று கூடல் நிகழ்வு

ஏ.ஆர்.எம்.றிபாஸ்

கிண்ணியா நிருபர்

பலஸ்தீன்  நில தினத்தை முன்னிட்டு  சமூக அமைப்புக்கள் மற்றும் சர்வமத தலைவர்கள் இணைந்து ஒன்று கூடல்  நிகழ்வு ஒன்றினை கிண்ணியாவில் ஏற்பாடு நேற்று  (29)மாலை  செய்திருந்தனர். இந்நிகழ்வு கிண்ணியா  இன் விடுதியில் நடைபெற்றது.

நிகழ்வில் பிரதம அதிதியாக ஆன பலஸ்தீன் நாட்டின் தூதுவர்  டொக்டர்.சுகைர் முஹம்மத் செய்த் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்


இந்நிகழ்வில் பலஸ்தீன் நில மீட்பு தின தொடர்பில் சர்வ மதத் தலைவர்கள் உரையாற்றினார்கள்.

இதன்போது நில  தினம் தொடர்பில் இலங்கைக்கான பலஸ்தீன் தூதுவர் சுகைர் முஹம்மத் செய்த் உரையாற்றினார்.


இதன்போது களவாடப்பட்ட பலஸ்தீன் நிலம் எனும் புத்தகம் ஊடகவியலாளர் ரிப்தி அலி வெளியீட்டு வைத்தார்.

இதன்போது தூதுவருடனான கேள்வி பதில் நிகழ்வுகளும் இடம் பெற்றது.


திருகோணமலை மாவட்ட  புத்தி ஜீவிகள் மற்றும் திருகோணமலை மாவட்ட மக்கள் பலஸ்தீன் மக்களுடன் இருக்கிறார்கள் என்றும் இலங்கை கொடியையும் பலஸ்தீன் கொடியையும் அசைத்து ஆதரவு வழங்கினர்.

No comments