க.பொ.த சாதாரண தர பரீட்சையில் சித்தி பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் பாராட்டுக்களும், வாழ்த்துக்களும் - கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏம். ஹிஸ்புழ்ழாஹ்கடந்த வருடம் நடைபெற்ற க.பொ.த சாதாரண தர பரீட்சையின் பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில் இப் பரீட்சையில் சித்தி அடைந்த சகல மாணவ மாணவிகளுக்கும் கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புழ்ழாஹ் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

"தங்களின் வாழ்க்கையில் மிக முக்கியமான பரீட்சையில் சித்தி பெற்றிருக்கிறீர்கள். இச் சித்தி அடைவானது எதிர்காலத்தில் உங்களது வாழ்க்கையில் முன்னேற்றத்தைச் செய்ய வேண்டும். க.பொ.த உயர்தரத்திலே பொருத்தமான பாடங்களைத் தெரிவு செய்து அவை எதிர்காலத்திலே நல்ல முறையில் தொழில்வாய்ப்புக்களை பெறக்கூடியதாக அமைய வேண்டும். 

இதே நேரம் பரீட்சையில் சித்தி அடையாத மாணவர்கள் கவலை அடையாமல் மீண்டும் பரீட்சைக்கு சமூகமளிக்க வேண்டும். மேலும் அவர்களுக்காக அரசாங்கம் பல்வேறு பட்ட தொழிற்பயிற்சி நிலையங்களூடாக தொழிற்பயிற்சிகளை வழங்குகிறது. அவற்றில் பொருத்தமானதை இனம் கண்டு அதன் மூலம் தமது எதிர்காலத்தை சிறப்பாக்க முடியும்"என்று ஆளுநர் குறிப்பிட்டார்.

No comments