வெப்ப அலை தாக்கத்தில் இருந்து காத்துக் கொள்வது எவ்வாறு?


எம் .என். முஹம்மத் 
ஆசிரிய ஆலோசகர் (விஞ்ஞானம்)

நாடெங்கும் கடும் சூடான காலநிலை நிலவுகின்றது. இந்த காலநிலை மாற்றத்தினால் நாட்டு மக்களில் கணிசமான அளவு அசௌகரியங்களை எதிர்நோக்குகின்றனர். எல்னினோ காலநிலை மாற்றமும் ஏற்பட்டுள்ளதால் இம்முறை வெப்ப தாக்கம் ஓரளவு கடுமையாக இருக்கும் என எதிர்பார்கப்படுகின்றது.

வெப்பத்தால் கூடுதலாக பாதிக்கப்படுவோர் 75 வயதைத் தாண்டிய வயோதிபர்களும் ,குழந்தைகளும் ,சிறுவர்களுமே. இவர்கள் சாதாரணமாக வெப்பநிலை 32°C ஐ விட அதிகரிக்கும் போது பாதிப்படைவர். இது தவிர பின்வரும் நிலமைகளில் உள்ளோரும் பாதிப்படைவர்.

01. இருதய நோயாளிகள்
02. சுவாசத் தொகுதியுடன் தொடர்பான நோய்களை உடையோர்.
03. பாகின்ஸன் போன்ற நோய் நிலமைகளை உடையோர் .
04. கூலி வேலை செய்வோர்.
05. மதுசாரம் அருந்துவோர்.
06. உடல், உள ஆரோக்கியம் பாதிப்படைந்தோர்.

இந்த நிலமைகளில் பின்வரும் விடயங்களை கையாள்வது சிறந்தது.
01. கடும் வெப்பம் நிலவும் போது வீட்டின் யன்னல்களை மூடி விடுங்கள்.

02. காலை 11 am துவக்கம் 3 pm வரை கண்டிப்பாக வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும். (பாடசாலைகளின் இடை வேளை நேரங்களை மாற்றுவது நன்று)
03. மென்மையான நிறமான திரைச் சீலைகளை (Curtain Clothe) பயன்படுத்த வேண்டும்.
04. குளிப்பது, உடலை நீரால் நனைப்பது முக்கியமானது.
05. கூடுதலான அளவு நீர் அருந்த வேண்டும். பழவகைகள் கூடுதலாக உண்ன வேண்டும்.
06. மென்மையான ஆடைகளை அணிய வேண்டும். வெந்நிற ஆடைகள் சிறப்பானது.
07. பிள்ளைகள் கடும் உடல் உழைப்பை வேண்டும் விளையாட்டுக்களை தவிர்க்க வேண்டும்.
08. உடலில் நீரழப்பு நிலை ஏற்பட்டால் உடன் வைத்தியசாலையில் அனுமதிக்க வேண்டும்.
வெப்பநிலை 41°C விட அதிகரிப்பது மிகவும் ஆபத்தானது, சகல மனிதர்களும் பாதிக்கப்படுவர், இத்தகு நிலை ஏற்படின் அரசு விடுமுறை வழங்குவதே சிறந்தது (அடுத்து வரும் நாட்களில் இத்தகு நிலை வட மத்திய மாகாணம், வவுனியா, முல்லைத்தீவு மாவட்டங்களில் ஏற்பட வாய்ப்புள்ளது.)
இது அதி தீவிர நிலையாகும். Heat shock ஏற்பட்டு பலர் உயிரிழக்க வேண்டியும் ஏற்படலாம். இதன் போது அரச இயந்திரம் சிறப்பாக தொழிற்பட வேண்டும்.
sor,m/par
No photo description available.

No comments