இலங்கை மக்கள் தொடர்ந்தும் கள்வர்களையே ஆட்சியாளர்களாக தெரிவு செய்து வருகின்றனர் கொழும்புப் பல்கலைக் கழக ஊடக கற்கைகள் துறையின் பீடாதிபதி பேராசிரியர் கமல் விலேபொடஎம்.எல்.எஸ்.முஹம்மத்                        
இரத்தினபுரி

உலகில் மிகச்சிறந்த நாகரிகத்தையும் சம்பிரதாயங்களையும் பின்பற்றி வரும் இலங்கை மக்கள் தொடர்ந்தும் கள்வர்களையே ஆட்சியாளர்களாக தெரிவு செய்து வருகின்றனர் என கொழும்புப் பல்கலைக் கழக ஊடக கற்கைகள் துறையின் பீடாதிபதி  பேராசிரியர் கமல் விலேபொட  இரத்தினபுரியில் தெரிவித்தார்.

கடந்த வெள்ளிக்கிழமை(29) இரத்தினபுரி மாவட்ட ஊடகவியலாளர்களுக்கு ஐடியா நிறுவனத்தின் அனுசரணையுடன் இரத்தினபுரி ஈ.ஸி.டி.ஜ.ஸி.நிறுவனம்   ஒழுங்கு செய்திருந்த விஷேட ஊடக செயலமர்வில் சிறப்பு வளவாளராக கலந்து கொண்டு உரையாற்றும்போதே பேராசிரியர் கமல் விலேபொட மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர்  தொடர்ந்து  இங்கு உரையாற்றுகையில்

"இலங்கைப் மக்கள் மிகவும் புத்தி மிக்கவர்கள்.உலகின் தலைசிறந்த கல்விமான்களுள் பலர் இந்நாட்டின் பிரஜைகள்.


சர்வதேச கருத்தரங்குகளிலும்,மகாநாடுகளிலும் எமது நாட்டின் கல்விமான்கள் உரையாற்றும் போது பலரும் ஆவலாக அவதானிக்கின்றனர்.இந்நாட்டில் அனைத்தும் உள்ள போதிலும் உண்மையான ஆட்சியாளர்கள் இல்லை.தொடர்ந்தும் கள்வர்களே இந்நாட்டை ஆட்சி புரிகின்றனர்.இந்த மோசமான நிலை தோன்றுவதற்கு அனைவரும் ஊடக நிறுவனங்களையும்,ஊடகவியலாளர்களையுமே பயன்படுத்தி வருகின்றனர்.இது எந்த வகையிலும் ஆரோக்கியமான நிலை அல்ல.

எமது மக்கள் நல்லாட்சியையும் சனநாயகத்தையும் நேசிக்கின்ற போதிலும் ஊடகங்கள் நேர்மையாக செயற்பட தவறுவதால் எந்த மாற்றத்தையும்  நாம் கண்டுகொள்ள முடியாதுள்ளோம்.

ஊடகவியலாளர்கள் தம்மை சரியான முறையில் வளர்த்துக் கொள்வதன் ஊடாக மக்களையும் நன்கு தெளிவூட்ட முடியும்",எனவும் பேராசிரியர் மேலும் குறிப்பிட்டார்.

ஈ.ஸி.டி.ஐ.ஸி.நிறுவனத்தின் பணிப்பாளர் கே.பி.ஷமின்த பியஸேகரவின் தலைமையில் இடம்பெற்ற இச்செயலமர்வில் 30 இற்கும் மேற்பட்ட இரத்தினபுரி மாவட்ட ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டதுடன் ஊடகத்தின் ஊடாக மக்களை பலப்படுத்துவதகான ஒழுங்குகள் தொடர்பாகவும் விரிவாக ஆராயப்பட்டன. 

No comments