ஏறாவூர் மீராகேனி மஸ்ஜிதுல் ஹிழ்ர் பள்ளிவாசலுக்கான புதிய கட்டட அமைப்புக்கான ஆரம்ப கட்ட நிர்மாண பணிகளை உத்தியோகபூர்வமாக கையளிக்கும் நிகழ்வு

(ஊடகப் பிரிவு)

சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் அலி சாஹிர் மௌலானா அவர்களின் முயற்சியில் கம்பெரலிய செயற்திட்டத்தின் மூலமாக ஏறாவூர் மீராகேனி மஸ்ஜிதுல் ஹிழ்ர் பள்ளிவாசலுக்கான புதிய கட்டட அமைப்புக்கான ஆரம்ப கட்ட நிர்மாண பணிகளை உத்தியோகபூர்வமாக கையளிக்கும் நிகழ்வு பள்ளிவாசல் நிருவாகத்தின் ஏற்பாட்டில் (09) சனிக்கிழமை இரவு இடம்பெற்றது.

இதில் பிரதம அதிதியாக சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் அலி ஸாஹிர் மௌலானா அவர்கள் கலந்து கொண்டதுடன் , ஏறாவூர் நகர சபையின தவிசாளர் வாஸித் , இராஜாங்க அமைச்சரின் இணைப்பு செயலாளர் தபாலதிபர் நஸீர் , அமைச்சரின் இணைப்பாளர்கள் முன்னாள் அதிபர்களான சயீட் , சக்கூர் உட்பட உலமாக்கள் ,பிரதேச முக்கியஸ்தர்கள் , பொதுமக்கள் பலரும் பங்கேற்றிருந்தனர்.

குறித்த பள்ளிவாசல் கட்டுமாண பணிகளுக்காக இவ்வாண்டும் நிதி ஒதுக்கீடுகளை செய்து தருவதாகவும் , இயலுமான பங்களிப்புகளை செய்வதாகவும் இராஜாங்க அமைச்சரினால் உறுதியளிக்கப்பட்டது

No comments