இலங்கை போர்க் குற்றவாளிகளை சிறைக்குள் தள்ளுங்கள்இலங்கை மீதான ஐக்­கிய நாடு­கள் சபை­யின் தீர்­மா­னம் வரவர மோச­மா­க­வுள்­ளது. போர்க்­குற்­றம் இழைத்த இரா­ணுவ அதி­கா­ரி­க­ளுக்­குத் தண்­டனை வழங்கி அவர்­களை உடன் சிறை­யில் அடைக்­க­வேண்­டும் அரசு. அப்­போ­து­தான் ஐ.நாவின் பிடி­யி­லி­ருந்து இலங்கை தப்­பித்­துக்­கொள்­ள­லாம். இவ்­வாறு இலங்கை அர­சுக்கு அறி­வுரை வழங்­கி­யுள்­ளார் ஐக்­கிய தேசிய முன்­ன­ணி­யின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரும் முன்­னாள் இரா­ணு­வத் தள­ப­தி­யு­மான பீல்ட் மார்­சல் சரத் பொன்­சேகா.

வெளி­நாட்டு செய்­திச் சேவை­யொன்­றின் கொழும்பு செய்­தி­யா­ள­ருக்கு வழங்­கிய செவ்­வி­யி­லேயே சரத் பொன்­சேகா மேற்­கண்­ட­வாறு கூறி­யுள்­ளார்.

அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது:

போரின் இறு­தி­யின் போதும் அதன் பின்­ன­ரும் சில இரா­ணுவ அதி­கா­ரி­கள் தமிழ் மக்­கள் மீதும் விடு­த­லைப்­பு­லி­கள் அமைப்­பில் இருந்து சர­ண­டைந்த மற்­றும் கைது­செய்­யப்­பட்ட போரா­ளி­கள் மீதும் போர்க்­குற்­றங்­க­ளைப் புரிந்­துள்­ள­னர். இதற்­கான சாட்­சி­யங்­கள் என்­னி­டம் இருக்­கின்­றன. அதே­வேளை பாதிக்­கப்­பட்ட தமி­ழர்­க­ளும் சாட்­சி­க­ளாக உள்­ள­னர்.

வெள்­ளைக்­கொ­டிச் சம்­ப­வம் மிகப் பெரிய போர்க்­குற்­ற­மா­கும். இத­னு­டன் தொடர்­பு­டைய இரா­ணுவ அதி­கா­ரி­கள் மற்­றும் அப்­போ­தைய ஆட்­சி­யில் இருந்த முக்­கி­ய­மா­ன­வர்­க­ளின் குரல் பதி­வு­க­ளும் குற்­றம் இழைக்­கப்­பட்ட காணொ­லி­க­ளும் என்­னி­டம் இருக்­கின்­றன.

சாட்­சி­யங்­களை விசா­ரித்து இரா­ணுவ அதி­கா­ரி­க­ளை­யும் அப்­போ­தைய ஆட்­சி­யில் இருந்து போர்க்­குற்­றங்­க­ளுக்­குத் துணை­போன முக்­கி­ய­மா­ன­வர்­க­ளை­யும் உடன் சிறைக்­குள் தள்­ள­வேண்­டும் அரசு.

சில இரா­ணுவ அதி­கா­ரி­க­ளின் சட்­ட­வி­ரோ­த­மான – படு­கே­வ­ல­மான நட­வ­டிக்­கை­க­ளி­னால் நாட்­டின் முழு இரா­ணு­வத்­துக்­கும் அப­கீர்த்தி ஏற்­பட்­டுள்­ளது. குற்­றம் இழைத்த இரா­ணுவ அதி­கா­ரி­க­ளுக்­குத் தாம­த­மின்றி தண்­ட­னையை வழங்க வேண்­டும் அரசு.

ஐ.நா. தீர்­மா­னத்­துக்கு இணை அனு­ச­ரணை வழங்­கி­விட்டு ஐ.நாவு­ட­னும் பன்­னாட்­டுச் சமூ­கத்­து­ட­னும் முட்டி மோதி­னால் இலங்­கைக்­குத்­தான் பாதிப்பு.

வெளி­நாட்டு நீதி­ப­தி­களை உள்­ள­டக்­கிய கலப்பு நீதி­மன்­றப் பொறி­மு­றையை ஏற்­க­மாட்­டோம் என்று இலங்கை அரசு தொடர்ந்து மார்­தட்­டிக்­கொண்­டி­ருக்­கா­மல் போர்க்­குற்­றம் இழைத்­த­வர்­க­ளுக்கு உடன் தண்­ட­னையை வழங்க வேண்­டும்.

அதே­வேளை போர்க்­குற்­றம் தொடர்­பில் எந்த விசா­ர­ணைக்­கும் நான் தயா­ராக உள்­ளேன் என்­பதை மீண்­டும் தெரி­வித்­துக்­கொள்ள விரும்­பு­கின்­றேன். விசா­ர­ணை­க­ளின்­போது என் வச­மி­ருக்­கும் சாட்­சி­யங்­களை வழங்க நான் தயங்­க­மாட்­டேன் – என்­றார். 

No comments