மஞ்சந்தொடுவாய் யூனானி ஆயுள்வேத வைத்தியசாலைக்கு இராஜாங்க அமைச்சர் அலிஸாகிர் மௌலானா விஜயம்.


ஊடகவியலாளர் டீன் பைரூஸ்
மஞ்சந்தொடுவாயில் அமைந்துள்ள unani யூனானி ஆயுள்வேத ஆராய்ச்சி வைத்தியசாலைக்கு சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் அலிஸாகிர் மௌலானா நேற்று (11) விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார்.
மேற்படி விஜயத்தின் போது வைத்தியசாலையின் குறைபாடுகள், காத்தான்குடி முதியோர் இல்ல வலாகத்தில் அமைய இருக்கும் புதிய கட்டுமான விடயம், வைத்தியசாலையின் அபிவிருத்தி தொடர்பான விடயங்கள் உட்பட பல விடயங்களையும் தேவைப் பாடுகளையும் இதன் போது வைத்தியசாலையில் பொறுப்பதிகாரி டாக்டர் ஏ.எல்.எம். ஜலால்தீன் அவர்களிடம் இராஜாங்க அமைச்சர் அலிஸாகிர் மௌலானா கேட்டறிந்து கொண்டார்.


கம்பெரலிய திட்டத்தின் ஊடாக முடியுமான விடயங்களை செய்து தருவதாக சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் அலிஸாகிர் மௌலானா தெரிவித்ததாக டாக்டர் ஏ.எல்.எம். ஜலால்தீன் தெரிவித்தார்.
மேற்படி நிகழ்வில் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான பொறியியலாளர் சிப்லி பாரூக், யு.எல்.என்.எம். முபீன், வைத்தியசாலை அபிவிருத்திக்குழு உறுப்பினர்கள், வைத்தியர்கள், தாதியர்கள், ஊழியர்கள் உட்பட பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது


No comments