பாலமுனை நவீன டை நிலையம் நான் கண்ட கணவு...

(ஏ.அர் மபூஸ் அஹமட்)

நேற்று 29.03.2019 கிழக்கு மாகாண சபைக்கு  வைபவ ரீதியாக கையளிக்கப்பட்ட 

கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சின் கீழான புடவை வடிவமைப்பு, சாயமிடுதல் மற்றும் சேவைகள் நிலையம் பாலமுனைக்கு  ஒரு வரப்பிரசாதம்..

சிறு பராயத்தில் நான் எனது நண்பர்களுடன்  அடிக்கடி பாலமுனையில் ஓய்வு நேரங்களை கழிப்பது வழக்கம். காரணம் காத்தான்குடி பிரதேசம் துரிதமாக அபிவிருத்தி அடைய அதன் இயற்கை அழகு வற்றிப்போனது. அதற்கு பகரமாய் பாலமுனை பிரதேசம் கடற்கரையுடன் கூடிய அழகிய பிரதேசம். இப்போதும் கூட...

அப்போதெல்லாம் பயங்கரவாதம் தலைவிரித்தாடும். எங்கும் மரண பயம். இருப்பினும் இளம் கன்று பயமறியாதல்லவா?..

அன்றைய அதிகமான ஜும்ஆக்கள் பாலமுனை பள்ளியில்தான்..

அன்றைய காலத்தில் துப்பாக்கி சத்தத்தால் புலித்துப்போன காதுகளுக்கு பாலமுனை கைத்தறி ஓசைகள் இதமாக இருக்கும்.  பெரும்பாலான  ஏழைகளின் பூமியான அது எப்போதும் அமைதியாக இருக்கும். 

ஒரு நாள் நானும் நண்பர் N.M.சுக்ரியும் ஒரு ரேசிங் சைக்கிளில் (அவனது சைக்கிளில்) வழக்கம் போல பாலமுனைக்கு போகும் போது ஒரு கைத்தறி வியாபாரி நூல் மற்றும் கைத்தறி உபகரணங்களுடன் சைக்கிளில் போய்கொண்டு இருந்தார். 

திடீரென பெரிய வெடிச்சத்தம் கேட்டவுடன் நானும் நண்பரும் பதறிப்போனோம். கண்ணைமூடி திறந்த போது அவரும் அவரது கைத்தறி உபகரணங்களுடன் கீழே விழுந்து கிடந்தார்.  நாலாபுறமும் அவரது பொருட்கள் சிதறிக்கிடந்தன.  அப்போது தான் புரிந்தது (நீங்கள் நினைத்தது போல் அல்ல) அவரது சைக்கிள் டயர் வெடித்ததுவே அது.. அவசரமாக உதவிக்காக இறங்கினோம்.  கதைத்தபோதுதான் புரிந்தது அந்த கைத்தறி வியாபாரி நூலுக்கு சாயமிடுவதற்காக மருதமுனைக்கு போக வேண்டுமாம்..

ஆனாலும் அன்றைய சம்பவம் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தினாலும் என்னால் வேறெதுவும் செய்ய முடியவில்லை அன்று..

இப்போது விடயத்துக்கு வருகிறேன்...

எப்போதும் எமது அமைச்சு பரபரப்பாக இயங்கும். அன்று ஒரு கூட்டம். கெளரவ அமைச்சர் மனவேதயுடன் சில விடயங்களை அதிகாரிகளிடம் பேசினார்.  கிழக்கில் 

மருதமுனை கைத்தறிக்கு பெயர்பெற்ற பிரதேசம். அதனால் அமைச்சர் அங்கு ஒரு நவீன முறையில் கைத்தறி நூலுக்கு சாயமிடும் மற்றும் வடிவமைக்கும் நிலையத்தை அமைக்க விரும்பினார். அதற்கான நிதியும் ஒதுக்கப்பட்டது. ஒன்பது மாதங்கள் கடந்த நிலையிலும் ஒரு துண்டு காணி பெறப்படவில்லை. காரணம் உங்களுக்கு தெரியும்.  அரசியல்...


அன்றைய காலத்தில் தலைவர் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அவர்கள் அம்பாறை மாவட்டத்தில் கால்வைக்க முடியாத நிலை..

(இன்றைய நிலை தலைகீழ்)

கடைசிவரையில் நிலம் கிடைக்காத நிலையில் (சம்மாந்துறை கைத்தொழில் பேட்டை போல்) குறிப்பிட்ட திட்டம் ஒரு மத்திய மலைநாட்டு பிரதேசத்துக்கு போக வேண்டிய தருனத்தில்...

அமைச்சின் மேலதிக செயலாளர் தாஜுதீன் சேர்  கூட்டத்தை முடித்துவிட்டு வெளியே வரும் போது இந்த நல்ல அமைச்சரை உங்கள் பிரதேச மக்களுக்கு பயன்படுத்த தெரியவில்லை, பிரயோஜனமான திட்டமொன்று கைநழுவ போவதாக கடிந்து கொண்டார்..

உடனே நான் விபரத்தை கேட்டறிந்து கொண்டு அவரிடம் ஒரே ஒரு நாள் பிட்படுத்துமாறு கூறிவிட்டு அமைச்சரிடம் வந்து, சேர் வெறும் அரைமணி நேரம் தூரமே கொண்ட ஒரு பிரதேசம் உள்ளது அதுவும் மருதமுனை போன்ற கைத்தறி பிரதேசம். அங்கு இதை நிறுவினால் எல்லோரும் பயன் பெறுவர் என்றேன். (அவருக்கு பாலமுனை பற்றி தெரியாது) அவரும் தயங்காது தலையசைத்தார்....

நண்பர் N.M.சுக்ரியை தொடர்பு கொண்டு விடயத்தை கூறி காணி தேடலில் இறங்கினோம். அப்போது தவிசாளர் அஸ்பர் அவர்களிடம் இருந்து சாதகமான பதில் கிடைத்தது. இருப்பினும் அக்காணி இத்திட்டத்திற்கு பொருத்தமில்லை என்பதால் அப்போது பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சராக இருந்த தற்போதைய ஆளுநர் அவர்களின் கவனத்திற்கு உடனே கொண்டு வந்தேன்..

ஒரு மணி நேரம் தான் இருக்கும் சகோதரர் பிரதி அமைச்சரின் இணைப்பு செயலாளர் றுஸ்வின் அவர்கள் காணிக்கடிதத்துடன் என்னை சந்திக்கிறார்.. 


காலங்கள் உருண்டோடியது ஒரு நாள் பிரதி அமைச்சர் (தற்போதைய ஆளுநர்) கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புழ்ழாஹ் அவர்கள் ஊரில் நடந்த ஒரு திருமண நிகழ்வில் என்னை சந்திக்கிறார். பாலமுனையில் கட்டப்பட்டு வரும் கைத்தறி நிலையம் தான் நினைத்திராத அளவு பெரிய திட்டம் என விபரிக்கிரார்.

அன்றைய தினமே நானும் நண்பர் சுக்ரியும் பாலமுனைக்கு சென்று கைத்தறி நிலையத்தை பார்வையிடுகிறோம். அளவற்ற சந்தோஷம். ஒரு திருப்தி...

அந்த பாலமுனைக்கு ஏதாவதுசெய்துவிட்தாக ஒரு ஆறுதல்....

வேலைப்பளு காரணமாக ஆரம்ப நிகழ்வுகளிலும் கையளிக்கும் நிகழ்விலும் பங்கு கொள்ள முடியவில்லை...

இருப்பினும் இத்திட்டம் வெற்றி பெற உதவிய வல்ல இறைவனுக்கும்..

கெளரவ கைத்தொழில் மற்றும் வணிக நீண்டகால அகதிகள் விவகார கூட்டுறவு அபிவிருத்தி தொழிற்பயிற்சி மற்றும் திறன் அபிவிருத்தி அமைச்சரும் 

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசிய தலைவருமான ரிஷாட் பதியுதீன் அவர்களுக்கும்..

ஆதரவு தந்த கெளரவ இராஜாங்க அமைச்சர் M.S.S.அமீர் அலி அவர்களுக்கும்..

கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி எம் .எல். ஏ.எம். ஹிஸ்புழ்ழாஹ் அவர்களுக்கும்..

அவரது இணைப்பு செயலாளர் சகோதரர் றுஸ்வின் அவர்களுக்கும்...

தவிசாளர் s.h.m. அஸ்பர் jp அவர்களுக்கும்...

எனது நண்பர் N.M. சுக்ரி அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்..


செய்தி...

கிழக்கு மாகாண சபைக்கு கையளிக்கும் நிகழ்வு இன்று (29) காலை மட்டக்களப்பு, பாலமுனையில் நடைபெற்றது. 


அமைச்சர் ரிஷாத் பதியுதீன் ஆளுனர் ஹிஸ்புல்லாஹ்விடம் இந்த நிலையத்தை உத்தியோகபூர்வமாக  கையளித்தார். 

இந்த நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் அமீர் அலி, பிரதி அமைச்சர் அப்துல்லாஹ் மஹ்ரூப், அமைச்சரின் மேலதிக செயலாளர் தாஜுதீன், கிழக்கு மாகாண மேலதிக செயலாளர் அஸீஸ், மக்கள் காங்கிரஸின் செயலாளர் சுபைதீன், புடவைகள் நிறுவனத்தின் பணிப்பாளர் ரொபட் பீரிஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர்

No comments