அமைச்சர் றிசாட் பதியுத்தீன் காத்தான்குடி விஜயம். நகரசபை உறுப்பினர் ஜவ்பர்கான் தலைமையில் நிகழ்வுகள்.

அமைச்சர் றிசாட் பதியுத்தீன் காத்தான்குடி விஜயம் காத்தான்குடி    நகரசபை உறுப்பினர், கவிமாமணி ஜவ்பர்கான் தலைமையில் நிகழ்வுகள் இடம் பெற்றன

மக்கள் தேவைகளை நிவர்த்தி செய்யும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் செயற்திட்டத்தின் கீழ் காத்தான்குடி நகரசபை பிரிவில் 8 புதிய வீதிகள் இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி அவர்களின் நிதி ஒதுக்கீட்டினால் அமைக்கப்படுகின்றன.

இத்திட்டத்தின்கீழ் பூரணப்படுத்தப்பட்ட நூறாணியா வட்டார வண்டிக்காரன் வீதியை திறந்து வைத்து புதிய வீதிக்கு அடிக்கல் நடும் நிகழ்வு நேற்று (29.03.2019 வெள்ளி)  அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் காத்தான்குடி அமைப்பாளர், காத்தான்குடி நகரசபை உறுப்பினர், சிரேஷ்ட ஊடகவியலாளர் TL.ஜவ்பர்கான் தலைமையில் நடைபெற்றது.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் அமைச்சர் ரிசாத் பதியுத்தீன் பிரதம அதிதியாக கலந்து கொண்டார் இதன் போது  தவிசாளர் இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர்அலி,பிரதியமைச்சர் அப்துல்லாஹ் மஹ்றூப் காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவணங்கள் சம்மேளன தலைவர் மெளலவி எம்.ஐ.ஆதம்லெப்பை (பலாஹி) காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமா சபை தலைவர் மெளலவி எம்.ஐ.அப்துல் கையூம் (ஷர்கி),கட்சியின் நகர சபை உறுப்பினர் ஏ.எம்.மாஹீர் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

நன்றி-ஊடகவியலாளர் TL.ஜவ்பர்கான்

No comments