மட்டக்களப்பு பாலமுனையில் புடவை வடிவமைத்தல்,சாயமிடுதல் சேவைகள் நிலையம் அமைச்சர் றிஸாத்தினால் ஆளுநர் ஹிஸ்புல்லாஹ்விடம் கையளிக்கப்பட்டது.

கைத்தொழில் மற்றும் வாணிக அமைச்சின்  கீழ் நீண்ட காலமாக இயங்கிவந்த புடவை வடிவமைத்தல்,சாயமிடுதல் மற்றும் சேவைகள் நிலையம் அமைச்சர் றிஸாத்தினால் ஆளுநர் ஹிஸ்புல்லாஹ்விடம் கையளிக்கப்பட்டது.

(ஊடகப்பிரிவு)

இடம் பெயர்ந்த நபர்களின் மீள்குடியேற்றம், கூட்டுறவுத்துறை அபிவிருத்தி தொழில் பயிற்சி மற்றும் திறன்கள் அபிவிருத்தி அமைச்சினால் மட்டக்களப்பு பாலமுனையில் நடைமுறைப்படுத்தப்பட்டுவந்த புடவை வடிவமைத்தல்,சாயமிடுதல் மற்றும் சேவைகள் நிலையத்தை கிழக்கு மாகாண சபையிடம் கையளிக்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது.

கைத்தொழில் மற்றும் வாணிப அமைச்சர் றிஸாத் பதியுதீன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் குறித்த நிலையத்தினை கிழக்கு மாகாணஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்விடம் அமைச்சர் றிஸாத் பதியுதீனினால் உத்தியோகபூர்வமாககையளித்தார்.இவ்வைபவத்தில் இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி பிரதியமைச்சர் அப்துல்லாஹ் மஹ்றூப் உள்ளிட்ட கைத்தொழில் மற்றும் வாணிக அமைச்சின் உயர் அதிகாரிகள் பலரும் பங்கேற்றனர்.

இந்நிலையம் கிழக்கு மாகாணத்தில் காணப்படும் இரண்டாவது புடவைவடிவமைத்தல்,சாயமிடுதல் மற்றும் சேவைகள் நிலையம் என்பது குறிப்பிடத்தக்கது.

P

No comments