பலஸ்தீன நில ஆக்கிரமிப்பு எதிர்ப்பு தின நிகழ்வு..

(எம்.பஹ்த் ஜுனைட்)

உலக முஸ்லிம்களின் புண்ணிய பூமியாகக் கருதப்படும் பலஸ்தீனத்தில் இஸ்ரவேல் யூதர்களினால் மேற்கொள்ளப்பட்டுவரும் பலஸ்தீன நில ஆக்கிரமிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து ஒவ்வொருவருடமும் மார்ச் 30 திகதி "பலஸ்தீன நில ஆக்கிரமிப்பு எதிர்ப்பு தினம்" நினைவூட்டப்படுகிறது.

அந்த வகையில் மார்ச் 30 சனிக்கிழமை இன்று ஏறாவூர் வாசிப்பு வட்டம்,மட்டக்களப்பு பெரியார் வாசகர் வட்டம், சோசலிச இளைஞர் சங்கம் ஆகியன இணைந்து "பலஸ்தீன நில ஆக்கிரமிப்பு எதிர்ப்பு " நிகழ்வினை கல்லடி கிறீன் கார்டன் ஹோட்டலில் ஏற்பாடு செய்திருந்தனர்.

ஏறாவூர் வாசிப்பு வட்டத்தின் செயற்பாட்டாளர் தோழர் சப்ரி தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் பிரதம அதிதியாக பாலஸ்தீன இலங்கை தூதுவர் கலாநிதி ஸுஹைர் ஸைட்  கலந்து கொண்டதுடன் சிறப்பு அதிதிகளாக தோழர் ராகவன்,தோழர் கலாநிதி சிவரத்னம் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரை யாற்றினர்.

இந் நிகழ்வில் காவத்தை முனை அல் அமீன் வித்தியால மாணவர்களது பலஸ்தீன மக்களின் துயரங்களை எடுத்துக்காட்டும் விதமான மேடை நாடகம் அரங்கேற்றப்பட்டதுடன் ஊடகவியலாளர் ரிப்தி அலி அவர்கள் எழுதிய "களவாடப்பட்ட பூமியின் கதை" என்ற பலஸ்தீன பயண அனுபவ நூல் ஒன்றும் வெளியீட்டு வைக்கப்பட்டதுடன் அதிகமானோர் நிகழ்வில் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments