சுவிட்ஸர்லாந்து தூதுவர் ஹன்ஸ்பீட்டர் மொக் அமைச்சர் ரவூப் ஹக்கீம் சந்திப்பு

இலங்கைக்கும், மாலைதீவுக்குமான சுவிட்ஸர்லாந்து தூதுவர் ஹன்ஸ்பீட்டர் மொக் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்களை இன்று (14), உயர் கல்வி அமைச்சில் சந்தித்து கலந்துரையாடினார். 

தற்போதைய அரசியல் சூழ்நிலை, அரசியரலமைப்பு தொடர்பிலான இன்றைய நிலைமை, இனங்களுக்கிடையிலான நல்லிணக்கம், சட்டமும் ஓழுங்கும் பேணப்படுவதன் அவசியம் போன்றவற்றை மையப்படுத்தி தூதுவர் அமைச்சரிடமிருந்து விளக்கங்களை அறிந்து கொள்வதில் ஆர்வம் செலுத்தினார். No comments