காத்தான்குடியில் பெண்கள் காப்பகம் அமைக்க ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் இணக்கம்.

(ஊடகப்பிரிவு) 

காத்தான்குடியை மையப்படுத்தி மிக நீண்டகால தேவையாக காணப்பட்ட பெண்கள் காப்பகம் ஒன்றை அமைக்க கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் உறுதி வழங்கியுள்ளதாக நகர சபை உறுப்பினர் சல்மா ஹம்ஸா தெரிவித்தார்.

ஆளுநர் ஹிஸ்புல்லாஹ்வுக்கும் நகர சபை உறுப்பினர் சல்மா தலைமையிலான மகளீர் அணிக்குமிடையிலான சந்திப்பு காத்தான்குடி ஆளுநர் அலுவலத்தில் நேற்று மாலை இடம்பெற்றது.

இதன்போது சமகாலத்தில் பெண்கள் எதிர்நோக்கும் பல்வகையிலான பிரச்சினைகள் தொடர்பாக ஆளுநரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டதுடன் பல்வேறு தேவைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

அத்துடன் பெண்களின் நலன்காக்கும் வகையில் விடுத்த அனைத்து வேண்டுகோளும் ஆளுநரினால் ஏற்றுக்கொள்ளப்பட்டதுடன் மிக விரைவில் இவற்றுக்கான வேலைகளை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.

இதில் பல்துறை மகளீர்சார்ந்தோர் பங்கேற்றனர்.

No comments