உத்தேச அரசியலமைப்பும் சமஷ்டி முறைமையும் மாபெரும் கருத்தரங்கு.

(எம்.பஹ்த் ஜுனைட் )

காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் மற்றும் குரல்கள் இயக்கம் ஆகியன இணைந்து ஏற்பாடு செய்திருந்த "உத்தேச அரசியலமைப்பும் சமஷ்டி முறைமையும்" எனும் தலைப்பிலான மாபெரும் கருத்தரங்கு சம்மேளனத்தின் தலைவர் மெளலவி எம்.ஐ. ஆதம்லெப்பை (பலாஹி) தலைமையில் சம்மேளனத்தின் அஷ் ஷஹீத் அல்ஹாஜ் அஹமது லெப்பை ஞாபகார்த்த மண்டபத்தில் இன்று (20) இடம்பெற்றது.

இந் நிகழ்வில்  சட்ட முதுமாணி வை.எல்.எஸ். ஹமீட் மற்றும் சட்டத்துறை சார்ந்த நிபுணர்கள் கலந்துகொண்டு நாட்டின் சமகால அரசியலமைப்பு மாற்றம் தொடர்பாகவும் அதில் உள்ள சிறுபான்மை சமுதாயம் எதிர்நோக்கும் சாதக பாதக நிலைமைகள் தொடர்பாகவும் விரிவாக ஆராயப்பட்டது.

முக்கியத்துவம் வாய்ந்த இக் கருத்தரங்கில் சம்மேளனத்தின் உறுப்பினர்கள், புத்திஜீவிகள், அரசியல் பிரமுகர்கள், சமூக ஆர்வலர்கள்,ஊடகவியலாளர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டு பயனடைந்தமை குறிப்பிடத்தக்கது

No comments