இலங்கை இராணுவத்தின் ஏற்பாட்டில் கிழக்கு மாகாண கட்டளைத்தளபதி வெற்றிக்கிண்ண உதைப்பந்தாட்ட சுற்றுப் போட்டியி மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் நடைபெற்றது,

இலங்கை இராணுவத்தின் ஏற்பாட்டில் கிழக்கு மாகாண கட்டளைத்தளபதி வெற்றிக்கிண்ண உதைப்பந்தாட்ட சுற்றுப் போட்டியின் இறுதி போட்டி நிகழ்வு (31.03.2019 ஞாயிறு) மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் நடைபெற்றது,

இறுதிச்சுற்றில் ஏறாவூர் இளந்தாரகை அணி வீரர்களை பிரதானமாக கொண்ட மட்டக்களப்பு மாவட்ட அணியினர்- அம்பாறை மாவட்ட அணியினரை 06 இற்கு 00 என்ற கணக்கில் தோற்கடித்து சயம்பியன் பட்டத்தை சுவீகரித்து கொண்டனர். 

வைபவத்தில் கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் செய்யித் அலி ஸாஹிர் மௌலான, இராணுவ உயர் அதிகாரிகள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

இதன் போது பெற்றி பெற்ற அணியினருக்கு வெற்றிப் பதக்கங்கள், சாண்றிதழ்கள், வெற்றிக் கிண்ணங்களும் வழங்கி வைக்கப்பட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது.

       

No comments