சிறப்பாக இடம்பெற்ற ஸாலிஹ் அல் குர் ஆன் மத்ரஸாவின் 27 ஆவது வருட மாபெரும் விழா.

காத்தான்குடி ஸாலிஹ் அல் குர் ஆன் மத்ரஸாவின் அல் குர் ஆன் கற்று  வெளியாகும் மாணவர்களின் 27 ஆவது வருட நிகழ்வு  மத்ரஸாவின் அதிபர் மெளலவி  எம்.எஸ்.எம்.அஸார் தலைமையில் வெள்ளிக்கிழமை காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் இடம்பெற்றது.

இம் மாபெரும் விழாவில் பிரதம அதிதிகளாக   அல் குர் ஆன் மத்ரஸாக்கள் அபிவிருத்தி சங்கத்தின்  தலைவர் மெளலவி எம்.ஐ.ஆதம்லெப்பை (பலாஹி), சிரேஷ்ட சட்டத்தரணி எம்.ஐ.எம்.அஸ்வர் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்ததுடன் மத்ரஸா மாணவர்களது திறமைகளை வெளிக்கொணரும் நிகழ்வுகளும் இடம்பெற்றன. 

அத்துடன் இரு கெளரவம் வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றது அதில்  27 வருடங்களில் அல் குர் ஆன் கற்று வெளியாகி உயர்நிலை அடைந்த பழைய மாணவர்கள் கெளரவிக்கப்படுவதுடன் , சமூகத்தில்  அடையாளப்படுத்தப்பட்ட பல துறைகளைச் சேர்ந்தவர்களுக்கு  அதி உயர் கெளரவ விருது வழங்கியும் கெளரவிக்கப்படது.

இவ்வருடம் வழங்கப்பட்ட அதி உயர் கெளரவ விருதுகளில் ஊடகத்துறைக்காக இரு விருதுகள் வழங்கப்பட்டது.

விடிவெள்ளி பத்திரிக்கையின் பிரதம ஆசிரியர் எம்.பி.எம்.பைரூஸ் மற்றும் நவமணி பத்திரிக்கையின் பிராந்திய ஊடகவியலாளர் எம்.பஹ்த் ஜுனைட் ஆகியோர் கெளரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந் நிகழ்வில் 2018 டிசம்பர் மாதத்தில் அல் குர் ஆன் மத்ரஸாக்கள் அபிவிருத்தி சங்கத்தினால் நடாத்தப்பட்ட அல் குர் ஆன் போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்த 47 மாணவர்களுக்கு சான்றிதழ்கள் பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டது.

No comments