கிழக்கு மாகாணத்தில் காணப்பட்ட 12 கால் நடை அபிவிருத்தி போதானாசிரியர்களுக்கான நியமனங்கள் ஆளுநரால்வை வழங்கிப்பு.


(ஊடகப்பிரிவு) 

கிழக்கு மாகாணத்தில் கால் நடை அபிவிருத்தியில் நிருவாகரீதியில் குறைகளை வைத்துக் கொண்டு எவ்வாறு இத்துறையில் முன்னேற்றத்தினை எதிர்பார்ப்பது என ஆளுனர் ஹிஸ்புல்லாஹ் கேள்வி எழுப்பியுள்ளார்.கிழக்கு மாகாண பொதுச் சேவைகள் ஆணைக்குழுவினால் நடாத்தப்பட்ட போட்டிப் பரீட்சையில் சித்திபெற்ற கால் நடை அபிவிருத்தி போதானாசிரியர்களுக்கான நிரந்தர நியமனங்கள் வழங்கும் நிகழ்வு இன்று மாலை திருகோணமலையில் உள்ள ஆளுநர் செயலகத்தில் இடம் பெற்றது.விவசாய திணைக்களத்தின் செயலாளர் கே.சிவனாதன் தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் பங்கேற்று கிழக்கு மாகாணத்தில் காணப்பட்ட 12 கால் நடை அபிவிருத்தி போதானாசிரியர்களுக்கான நியமனங்களை வழங்கிவைத்தார்.வைபவத்தில் கிழக்கு மாகாண பிரதம செயலாளர்  சரத் அபய குனவர்தன கிழக்கு மாகாண ஆளுநர் செயலகத்தின் செயலாளர் அசங்க அபயவர்தன கிழக்கு மாகாண முதலமைச்சர் செயலகத்தின் செயலாளர் யு.எல்.எம்.அசீஸ் மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் ஏ.எச்.எம்.அன்சார் உள்ளிட்ட விவசாய அமைச்சு மற்றும் விவசாய திணைக்களத்தின் உயர் அதிகாரிகள் என பலரும் பங்கேற்றனர்.


No comments