ஜனாதிபதி வேட்பாளராக சிராந்தி ராஜபக்ச.............?


முன்னால் ஜனாதிபதியும்.இன்னால் எதிர்கட்சித் தலைவருமான மஹிந்த ராஜபக்சவின் மனைவி சிராந்தி ராஜபக்சவைக் கூட ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்த முடியும் என அமைச்சர் நவீன் திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்.......

சிறி லங்கா பொதுஜன பெரமுனவின் முக்கியமான தீர்மாணங்களை எடுப்பவராக  சிராந்தி ராஜபக்சவே இருக்கின்றார் ஆகவே கூட்டு எதிரணியின் சார்பாகவும் சிறி லங்கா பொதுஜன பெரமுனவின் சார்பாகவும் தீர்மாணங்களை எடுக்கின்ற அவரைக் கூட ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்த முடியும் அதற்கு தடையேதும் கிடையாது என நவீன் திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

No comments