டாக்டர் அப்துல் கலாம் விருது வழங்கும் விழா நாளை கொழும்பில்


(எம்.எஸ்.எம்.ஸாகிர்)
லங்கா சாதனையாளர் மன்றம் விஸ்வம் கெம்பஸுடன் இணைந்து நடாத்தும் சிறந்த சேவைசெய்து சாதனை நிலை நாட்டியவர்களை இனங்கண்டு அவர்களுக்கு விருது வழங்கி கௌரவிக்கும் விழா நாளை (01) மாலை 04 மணிக்கு கொழும்பு 07, லக்ஷ்மன் கதிர்காமர் கேட்போர் கூடத்தில் நடைபெறும்.

விஸ்வம் கல்லூரியின் தலைவரும்டாக்டர் அப்துல் கலாம் கல்லூரியின் முகாமைத்துவதொழில்நுட்ப பிரிவு தலைவருமான பேராசிரியர் டாக்டர் ஏ. டெக்ஸ்டர் பெர்னாண்டோ தலைமையில் இடம்பெறும் இந்நிகழ்வில்பிரதம அதிதிகளாக சபாநாயகர் கரு ஜயசூரிய மற்றும் பத்மசிறி டாக்டர் விஜயகுமார் எஸ். சாஹ் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

கௌரவ அதிதிகளாகபேராசிரியர் வித்ய ஜோதி எம்.எச். றிஸ்வி ஷெரீப் மற்றும் பேராசிரியர் டாக்டர் எஸ். எல். றியாஸ்பேராசிரியர் டாக்டர் லக்ஷ்மன் மதுரசிங்கஅமைதியான உள்ளம் மன்றத்தின் ஸ்தாபகர் பேராசிரியர் டாக்டர் நப்ஹிட் கபூர்சமூகவியல்குற்றவியல் மற்றும் குற்றவியல் நீதி விசேட பட்டதாரி டாக்டர் திருமதி ஈ.ஏ.டீ. அனுஷா எதிரிசிங்கசிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் எம். ஆர். லதீப்டாக்டர் சஞ்சய ஹுலத்துவமுதுபெரும் ஊடகவியலாளர் கலாகீர்த்தி டாக்டர். எட்வின் ஆரியதாச ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

பிரதிப் பொலிஸ் மா அதிபர் சஜீவ மெதவத்தபுரொஸ்பெக்ட் க்ளோபலின் பணிப்பாளர் ஹமீட் சாதிக்லெப்டினன்ட் கேணல் சரத் தென்னக்கோன் ஆகியோர் விசேட அதிதிகளாகவும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்

No comments