நாடளாவிய ரீதியில் ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் மறுசீரமைப்புப் பணிகள் காங்கேனோடை வட்டாரத்திற்கான கிளை காரியாலயம் பொறியியலாளர் ஷிப்லி பாறூக்கினால் திறந்து வைக்கப்பட்டது.


ஏ.எல்.டீன் பைரூஸ்

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான றஊப் ஹக்கீம் அவர்களின் தலைமையில் நாடளாவிய ரீதியில் ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் மறுசீரமைப்புப் பணிகள் இடம்பெற்று வருகின்றது.

காத்தான்குடி, மன்முனைப்பற்று, மன்முனை வடக்கு பிரிவிற்குட்டபட்ட SLMC இன் புனரமைப்புப் பணிகள் வட்டார ரீதியாக வட்டாரக் கிளைகளை ஆரம்பித்து கட்சியை வலுவூட்டவும் நடவடிக்கைகள் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், மட்டக்களப்பு தொகுதி அமைப்பாளரும், இன்னாள் காத்தான்குடி நகர சபை உறுப்பினருமான பொறியியலாளர் ஷிப்லி பாறூக் அவர்களினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
நேற்று (19.02.2019 செவ்வாய்) காங்கேயனோடை வட்டாரக் கிளையின் அமைப்பாளரும், முன்னாள் மன்முனைப்பற்று பிரதேச சபை உறுப்பினருமான மதீன் தலைமையில் காங்கேயனோடை வட்டாரத்திற்கான கிளை காரியாலயம் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் அவர்களினால் திறந்துவைக்கப்பட்டது.

மேற்படி நிகழ்வில் காத்தான்குடி நகர சபையின் முன்னாள் நகர முதல்வரும், காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தின் முன்னாள் தலைவருமான மர்சூக் அஹமட்லெப்பை, உள்ளூராட்சி மன்ற வேட்பாளர்கள், கட்சியின் ஆதரவாளர்கள், ஊர் முக்கியஸ்தர்கள், கட்சியின் தொண்டர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
நிகழ்வினை தொடர்ந்து கட்சியின் தேசிய செயற்திட்டமான வீட்டுக்கு வீடு மரம் செயற்திட்டத்தின் அடிப்படையில் மரக் கன்றுகள் நடும் நிகழ்வும் இடம்பெற்றது.


No comments