2018 கொடகே கையெழுத்துப் போட்டி பரிசளிப்பு விழா

கொடகே நிறுவனத்தினால் நடத்தப்பட்ட 2018 ஆம் ஆண்டுக்கான சிங்கள் .தமிழ் மொழியிலான கையெழுத்துப் போட்டியில் தெரிவு செய்யப்பட்டநூல்களுக்கான  பரிசளிப்பு விழா எதிர்வரும் 2019 பிப்ரவரி 15 திகதி  பிற்பகல் 3.00 மணிக்குக் கொழும்பு மகாவலி கேந்திர நிலைய அரங்கில் நடைபெறும்.இந்த நிகழ்வில் பேராசிரியர் குசுமா கருணரத்தனஎழுத்தாளர் மு.சிவலிங்கம் ஆகியோர் சிறப்புரைகள் ஆற்றுவார்கள்.

இவ்விழாவில் 2018 ஆம் நடத்த போட்டியில் தெரிவுச் செய்யப்பட்ட சிங்கள மொழி நூல்களுடன்தமிழில் சிறந்த நாவலாக  தெரிவுச் செய்யப்பட்ட மன்னார் எஸ்.உதயனின் '' அலுவாக்கரை''  சிறந்த சிறுகதைத் தொகுதியாக செய்யப்பட்ட தங்கராசா செல்வகுமாரின் ''நாட்குறிப்பு''  சிறந்த கவிதைத் தொகுப்பாக செய்யப்பட்ட சப்னா செய்னுல் ஆப்தீனின்  '' சமுத்ராவும் அவள் இசைக்கும் புல்லாங்குழலும்'' ஆகிய நூல்களுக்கான விருதுகளும் ,பணப்பரிசிலும்சான்றிதழ்களும் வழங்கப்படும்  
  

No comments