முஸ்லிம் சகோதரா் ஒருவர் தாக்கப்பட்டது தொடர்பில் ஏறாவூர் சம்மேளனம் பொதுமக்களுக்கு விடுக்கும் முக்கிய அறிவித்தல்.


முஸ்லிம் சகோதரா் ஒருவர் தமிழ் உத்தியோகத்த் உள்ளிட்ட குழுவினரால் திட்டமிட்ட முறையில்  தாக்கப்பட்டது தொடர்பில் ஏறாவூர் சம்மேளனம் அவசர கூட்டம் ஒன்றினை நடாத்தினர்.
கடந்த  (08.01.2019 செவ்வாய்) சம்மேளனத்தின் நிறைவேற்றுக்குழு கூட்டம்  ஏறாவூர் சம்மேளன காரியாலயத்தில் நடைபெற்றது. 

இக்கூட்டத்தில் கீழ்வரும் தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன.

01.  சென்ற வாரம் தனது காணிக்குள் சென்ற ஏறாவூரைச் சேர்ந்த அப்துல் காதர் என்ற சகோதரரை நிர்வாணப்படுத்தி கொலை முயற்சியில் ஈடுபட்ட செயலை சம்மேளனம் வன்மையாக கண்டிக்கின்றது. இவ்வாறான ஒரு நிகழ்வு எந்த இனத்தை சேர்ந்தவருக்கும் ஏற்படக்கூடாது.

02. மேற்படி தாக்குதலில் ஈடுபட்ட மயூரன் ( காணி உத்தியோகத்தர் ) உட்பட 8 நபர்களையும் கைது செய்து சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். ஆனால் இதுவரை காணி உத்தியோகத்தர் மயூரனை தவிர வேறு யாரையும் பொலிஸார் கைது செய்யவில்லை. இதற்கான காரணம் என்ன? என்பதை தெரிந்து கொள்வதற்கும் மீதமுள்ள 07 நபர்களையும் கைது செய்ய வேண்டும் என்பதையும் வலியுறுத்துவதற்காக சம்மேளனம் இன்று (09.01.2019 புதன்) ஏறாவூர் பொலிஸ் அதிகாரியை சநந்தித்து பேசுவது என்றும் குறித்த நபர்களை கைது செய்து சட்ட நடவடிக்கை எடுக்க வைப்பதற்காக அரசியல் தலைவர்கள் பொலிஸ் மேலதிகாரிகள் போன்றோரிடமும் தொடர்பை ஏற்படுத்தி இவ்விடயத்தினை வலியுறுத்தும் முயற்சியில் சம்மேளனம் தீவிர கவனம் செலுத்துவது என்றும்.

03. குறித்த சம்பவம் தொடர்பில் பேச மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள சகல மதத்தலைவர்களை உட்பட சகலரையும் அவசரமாக அழைத்து கூட்டம் ஒன்றினை    ஏற்பாடு செய்வது என்றும். இக்கூட்டத்தில்  பல்சமயத்  தலைவர்கள், வர்த்தக சங்கங்களின் தலைவர்கள், நகர சபை,மாநகர சபை, பிரதேச சபை தவிசாளர்கள் போன்றோர்களும் இக்கூட்டத்தில் கலந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 
கூட்டம் (10.01.2018 வியாழன் )  நாளை நடாத்துவதற்கும் சம்மேளனம் ஏற்பாடுகளை மேற் கொண்டுள்ளது. தற்போது மாவட்டத்தில் ஒரு குழுவினரால் ஏற்படுத்தப்பட்டு வரும் இவ்வாறான  குழுப்பத்தை விரைவாக கட்டுப்படுத்துவது தொடர்பாக ஆராயப்பட உள்ளது.

04.  இன்ஷா அல்லாஹ் தற்போது நடைபெற்று வரும் அசாதாரன நிலைமைக்கு காரணம் யாது மற்றும் நடந்த சம்பவத்தை கண்டித்து ஊடக மாநாடு ஒன்றை எதிர்வரும் வெள்ளிக்கிழமை (11.01.2019) நடாத்துவதற்கும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் பொதுமக்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டிய காலம் இது என்பதால்  தொழுகை,பொறுமை, துஆ போன்ற நல் அமல்கள் மூலம் அல்லாஹ்வின் உதவியை எதிர்பார்த்து துஆ செய்யுங்கள்.

மேலும் முகப்புத்தகத்தில் தயவு செய்து பொறுப்பற்றவிதத்தில் கருத்துக்களை எழுதுவதில் இருந்து தவிர்ந்து கொள்ளுங்கள்.இனவாதிகள் எப்படியாது ஒரு இனக்கலவரத்தை ஏற்படுத்த கடும்பிரயத்தனம் மேற்கொள்கிறார்கள் என்பது புலனாகின்றது. எனவே முஸ்லிம்கள் இவ்வாறான சந்தர்ப்பத்தில் மிகவும் நிதானமாகவும் கவனமாகவும் செயலாற்ற வேண்டும். 

இன்ஷா அல்லாஹ் சம்மேளனம் அவ்வப்போது தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும் என்பதையும் அதன் போது தெரிவித்தனர்..
ஏறாவூர் அஸ்மி

No comments