மர்ஹும் நசீர் பலாஹி அவர்களின் மறைவையொட்டி நல்லாட்சிக்கான தேசிய முன்னணி விடுக்கும் இரங்கல் செய்தி.


(NFGGஊடகப் பிரிவு)

இன்றைய தினம் இறையடி எய்திய நல்லாட்சிக்கான தேசிய முன்னணி(NFGG)யின் மூத்த உறுப்பிAனர் அன்புற்குரிய சகோதரர் நசீர் மௌலவி அவர்களின் மறைவையொட்டி நல்லாட்சிக்கான தேசிய முன்னணி தனது பிரார்த்தனைகளையும் அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கிறது. (இன்னாலில்லாஹி வஇன்னாஇலைஹி றாஜிஊன்.)

மர்ஹும் நசீர் மௌலவி அவர்கள் NFGGயின் ஆரம்பகால உறுப்பினர்களில் ஒருவராவார்.கட்சியின் வளர்ச்சிக்காகவும் வெற்றிகளுக்காகவும் மிகுந்த அர்ப்பணிப்புடன் அயராது பாடுபட்ட ஒரு சகோதரர். புன்னகைத்த முகத்துடன் அனைவருடனும் இணைந்து கட்சியின் அனைத்து செயற்பாடுகளிலும் பணியாற்றியவர்.
கட்சியின் வளர்ச்சியில் பொருளாத ரீதியிலும் பெரும் பங்காற்றியதாராளகுணம் கொண்டவர்.நசீர் மௌலவி அவர்கள் மிகுந்த மென்மையான சுபாவம் கொண்ட ஒருவர்.
கட்சியின் அரசியல் சமூக செயற்பாடுகளில் தான் மாத்திரமல்லாது தனது குடும்பத்தினர்களையும் இத்தூய்மையான பணியில் பங்கெடுக்கடுக்கச் செய்தவர்.
அன்னாரின் மறைவு உண்மையில் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். எல்லாம் வல்ல இறைவன் அன்னாரின் சகல நற்பணிகளையும் பொருந்திக்கொண்டு அவருக்கு ஜன்னத்துல் பிர்தௌஸ்ஸினை வழங்குவானாக.
அன்னாரின் பிரிவினால் துயருற்றிருக்கும் அவரது மனைவி, பிள்ளைகள், குடும்பத்தினர்கள் அனைவருக்கும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி தனது ஆழ்ந்த அனுதாபங்களையும் கவலைகளையும் தெரிவித்துக்கொள்கிறது.

No comments